இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்தமாக்கப்பட்டவன் என்பவன் "பக்திமான் " மற்றும் பழமையானவன் என்று இந்த காலத்திலே வாழும் அநேகருக்கு தோன்றுகிறது. எவ்வாறாயினும், பரிசுத்தமாக்கப்பட்டவன் என்பது ஒரு வல்லமையுள்ள தேவனுடைய வார்த்தையாகும், இதன் பொருள் யாரையாவது அல்லது எதையாவது விசேஷித்த , பரிசுத்தமான, பிரித்தெடுக்கப்பட்ட மற்றும் தேவனின் பயன்பாட்டிற்கும் அவருடைய மகிமைக்கும் தயார்படுத்துவது, பொதுவானது அல்ல. நாம் ஒரு அசாதாரண மக்களாகவும், பரிசுத்தமாகவும், தேவனுக்காக பிரித்தெடுக்கப்பட்டவர்களாகவும் இருக்க அழைக்கப்பட்டுள்ளோம் (1 பேதுரு 2:9-10). ஆதிகால சபையின் கலாச்சாரத்திலும் இன்றும் பரவியுள்ள வேசித்தானமான காரியங்களை பொறுத்தவரை இன்றும் இது உண்மையாகும் . திருமணத்தினால் உண்டாகும் மகிழ்ச்சியான நிறைவுக்கான தேவனின் திட்டத்தைக் கொண்டாடும் அதே வேளையில், நாம் வேசித்தனத்திலிருந்து நாம் வெகு தொலைவிற்கு விலகி இருக்க வேண்டும், ஏனென்றால் நம் சரீரத்தினால் தேவனை எப்பொழுதும் மகிமைப்படுத்துகிறோம், கனப்படுத்துகிறோம் (1 கொரிந்தியர் 6:18-20).

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே , எங்கள் பாலியல் இச்சையினால் தூண்டப்பட்ட கலாச்சாரத்தில் பாலியல் சோதனையை எதிர்க்க முற்படுகையில், தயவுசெய்து எங்களைப் பாதுகாத்து, அதை மேற்க்கொள்ள பெலப்படுத்தும் . எங்களையும் எங்களின் சரீரத்தையும் நாங்கள் உணர்வுபூர்வமாக உமக்கு பரிசுத்த பலிகளாக ஒப்புவிக்கிறோம், நாங்கள் எங்கள் சரீரத்தை எவ்வாறு பயன்படுத்துகிறோம் என்பதில் உம்மை மகிமைப்படுத்தவும், கனப்படுத்தவும் , மகிழ்விக்கவும் விரும்புகிறோம். இயேசுவின் நாமத்தினாலே , நாங்கள் ஒவ்வொருவரும் எங்கள் முழு இருதயத்தோடும், மனதோடும் , வார்த்தையினாலும் , சரீர பெலத்தோடும் உம்மை ஆராதிக்க ஏங்குகிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து