இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவின் குடும்பத்தில் இருக்கும் நம் பிள்ளைகள் , நண்பர்கள் மற்றும் இளைய ஆவிக்குரிய "குழந்தைகளுக்கு" விசுவாசத்தைக் கடத்த முயலும்போது, ​​பவுலின் மாதிரியை நினைவில் கொள்வது நல்லது: பவுல்... சத்தியத்தைக் கற்பித்தார். அவருக்கு வெளிப்படுத்தப்பட்ட சத்தியத்தை மற்றவருக்கும் போதித்தார் . சத்தியத்தை தனது வாழ்க்கையிலே வெளிப்படுத்தினார். அவர் வழிநடத்திய மக்களை இந்த சத்தியத்தை தங்கள் அன்றாட வாழ்க்கையில் நடைமுறைப்படுத்த அழைத்தார். பவுலானவரின் வாழ்க்கை பிலிப்பியர்களுக்கு தேவனின் பிரசன்னத்தை முழுமையாக அனுபவிக்கவும், தேவன் அவர்களுக்குக் கொடுக்க விரும்பிய அமைதியைக் கண்டறியவும் உதவியது. நாம் வழிநடத்த விரும்பும் மக்களின் வாழ்க்கையில் நமது வார்த்தைகளும் மற்றும் மாதிரியும் இதேபோன்ற (பவுலைப்போல) ஒன்றைச் நடப்பிக்கட்டும் !

என்னுடைய ஜெபம்

பிதாவே, என்னைச் சுற்றியுள்ளவர்களை இயேசுவைப்போல மாற்ற நான் நல்ல தாக்கத்தை செலுத்த முயற்சிக்கும்போது, ​​வார்த்தையிலும் செயலிலும் சிறந்த போதாகராக இருக்க எனக்கு உதவுங்கள். கிறிஸ்தவப் பயணத்தில் என் உதவி தேவைப்படுபவர்களையும், என் குடும்பத்தில் உமது கிருபையிலே வளர விரும்புபவர்களை என் வார்த்தைகளும், மாதிரியும் அவர்களை ஆசீர்வதிக்கட்டும். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து