இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சில சமயங்களில், திருச்சபையின் மக்களிடையே ஏற்படும் வாக்குவாதங்கள் நம்மை சோர்வடையச் செய்து, தேவனின் குடும்பத்தில் நமக்குக் கிடைத்த நம்பமுடியாத ஆசீர்வாதங்களை இழக்கச் செய்யலாம். கர்த்தருக்குள் மகிழ்ச்சியாய் இருக்க நமக்கு பல காரணங்கள் உள்ளன. குறிப்பாக நம்மைச் சுற்றியுள்ளவர்கள் அற்பமான காரியங்கள் , பிரிவினை மற்றும் போட்டி ஆகியவற்றில் சிக்கிக் கொள்ளும்போது, ​​அந்தக் காரணங்களினால் நாம் நம் குறிக்கோளை மறந்துவிடக் கூடாது. மனச்சோர்வு, துக்கம் அல்லது ஆபத்து நம்மை சோர்வடையச் செய்து, நம் மகிழ்ச்சியை இழக்கச் செய்ய விடக்கூடாது. நமது மகிழ்ச்சி இயேசுவுக்குள் உள்ளது, நித்திய, மகிமையான மற்றும் ஜெய சந்தோஷம் . நமது நம்பிக்கையானது, நம் ஆண்டவராகவும், சதாகாலங்களின் இரட்சகராகவும் இருக்கும் உயிர்த்தெழுந்த இயேசுவுக்குள் உள்ளது என்பதை நாம் நினைவினில் கொள்வோம். நமது மகிழ்ச்சியை மீண்டும் பெறுவதற்கான நேரம் இது என்பதை பவுலானவர் நமக்குத் தெரியப்படுத்த விரும்புகிறார்!

என்னுடைய ஜெபம்

பிதாவே, இயேசுவை அறிந்ததினால் எனக்குள்ள உண்டான மகிழ்ச்சிக்காக நன்றி. அவருடைய மரணம் மற்றும் உயிர்த்தெழுதல் மூலம் நீர் எனக்குக் கொண்டு வந்த இரட்சிப்பினால் நான் மகிழ்ச்சியடைகிறேன். அவர் என்னுடனும் அவருடைய வருகைக்காக ஏங்குகிற அனைவருடனும் உமது நித்திய மகிமையைப் பகிர்ந்து கொள்ளத் திரும்பும் மகிமையுள்ள நாளை மகிழ்ச்சியுடன் கொண்டாட நான் எதிர்நோக்குகிறேன். எனது விரக்தியின் இருண்ட தருணங்களிலும் கூட, உமது பிள்ளையாக இருப்பதினால் ஆழமான மற்றும் நிலையான மகிழ்ச்சியைத் நிலைநிற்க செய்யும் நம்பிக்கையின் ஒளி மற்றும் வெற்றியின் உறுதிக்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். என் இரட்சகராகிய கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே மகிழ்ச்சியோடு நன்றி கூறி ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து