இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
ஆஹா! அற்புதமான பல சவாலான யோசனைகளுடன் எவ்வளவு வளமான வசனப்பகுதி பகுதி. தேவனானவர் மீட்பருக்காக வரலாற்றை தயார் செய்தார், பின்னர் அந்த இரட்சகராக தம் நேச குமாரனை அனுப்பினார். தேவனுடைய குமாரன் நியாயபிரமாண சட்டத்தின் அனைத்து சிரமங்களையும், மத அரசியலையும், மரணத்தின் பெலவீனங்களையும் கையாண்டார். தம்முடைய குமாரனின் அதிகாரத்தையும் , புகழ்ச்சியையும் கண்டு பொறாமை கொண்ட ஒரு ஜனக்கூட்டர்த்திக்கு முன் சிலுவையில் அவர் அறையப்பட்டு,அந்த கொடூரமான விலையினால் நம்முடைய பிதாவானவர் நமக்கு பாவத்திலிருந்து விடுதலையை வாங்கினார். தேவன் இதை அனுமதித்தார், ஏனென்றால் அவர் இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பினார், மேலும் நீங்களும் நானும் அவருடைய விசேஷித்த பிள்ளைகளாக ஆக முடியும், இன்னுமாய் பிதாவிடமிருந்து அந்த முழு சுவிகார புத்திரரின் மேன்மையான பாக்கியத்தை பெற முடியும் (ரோமர் 8:17). பவுலானவர் , குமாரர்களுக்கு மட்டும் உரிமைகள் வழங்கப்படுகின்றன என்று கூறுவதில் பாரபட்சம் அல்லது பாலின வேறுபாடுடன் அவர் கூறவில்லை , ஏனெனில் அவருடைய காலத்தில், குமாரத்திகள் பெரும்பாலும் பரம்பரை உரிமைகளை கொண்டிருக்கவில்லை. எனவே, யாவருக்கும் - ஆண்களுக்கும் பெண்களுக்கும் - ஒரு கனத்திற்குரிய குமாரனாக முழு உரிமையும் உள்ளது என்று அவர் கூறுகிறார். தேவனின் சரியான நேரத்தில் உண்டாக்கப்பட்ட திட்டம் மற்றும் பூரண குமாரன்(பாவமில்லாதவர்) ஆகிய இவைகள் தந்தையின் பூரண தியாகத்திற்கு வழிவகுத்தது, அது பாவம் மற்றும் மரணத்திலிருந்து நம்மை மீட்கவும் , எதிர்காலத்தில் நமக்கு இரட்சிப்பையும் மகிமையின் அழியாமையையும், உறுதியையும் கொண்டு வந்தது.
என்னுடைய ஜெபம்
பரலோகத்தின் பிதாவே , இயேசுவை அனுப்புவதற்கும், அவர் துன்புறுத்தப்படுவதையும், ஏளனப்படுத்தப்படுவதையும், சிலுவையில் அறையப்படுவதையும் பார்த்ததினால் உமக்கு உண்டான அனைத்து வலிகளையும் நீர் தாங்கி கொண்டதற்காக உமக்கு நன்றி. என் பாவ நிலையிலிருந்து என்னை மீட்டுக்கொண்டதற்காகவும் , என் பாவத்தின் சம்பளமாக இருந்த மரணத்திலிருந்து என்னை மீட்டு வாங்கியதற்காகவும் , கிறிஸ்துவுக்குள் இரட்சிப்பு என்ற ஈவை அளித்ததற்காகவும் , உமது நேச குமாரனின் கனத்துக்குரிய முழு புத்திர சுவிகாரத்தின் ஆவியை நான் பெறுவேன் என்ற உறுதியை அளித்ததற்காகவும் நன்றி. உம்முடைய அற்புதமான கிருபைக்காக எல்லா ஸ்தோத்திரமும் , மகிமையும் , கனமும், மாட்சிமையும் உமக்கே உண்டாவதாக . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.