இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சூழ்நிலையால் உத்தரவாதம் அளிக்கப்படுவதை விட அதிக உணர்ச்சிப்படுவது அல்லது நாடகத்தனமான முறையில் ஏதாவது ஒன்றிற்கு எதிர்வினையாற்றுதல்! சமூக ஊடக "விருப்பங்கள்" மற்றும் மிகைப்படுத்தப்பட்ட ஆளுமை முறை நிறைந்த நமது நவீன உலகில் அதைத் தேடவும் காண்பிக்கவும் நாங்கள் இவ்வுலகினால் நிர்பந்தம்பண்ணபடுகிறோம் . ஆனால் குழப்பம் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் சமாதானம் உண்டுபண்ணும் கிருபையினால் , குறிப்பாக சபை, குடும்பங்கள், உறவுகள் மற்றும் நமது பிரச்சனைக்குரிய உலகத்திற்கு தேவனின் அமைதியைக் கொண்டுவருவதற்கு மேலே சொன்ன கிருபை இன்றியமையாததாகும் . நாம் எப்படி மென்மையாக இருக்க முடியும்? நம்மை நோக்கி வரும் காயங்கள், குற்றங்கள் மற்றும் அவமதிப்புகளுக்கு அதிகமாக எதிர்வினையாற்றுவதை எவ்வாறு தடுக்கலாம்? கர்த்தர் நம் அருகில் இருக்கிறார்! அவர் நம் நியாயப்படுத்தல். அவர் நம் மாதிரியாய் . அவர் நம் ஆறுதல். அவர் நம் நம்பிக்கை. அவர் நம் பெலன் . அவர் அருகில் இருக்கிறார். நாம் தனியாக இல்லை, நமது எதிர்காலம் , நற்பெயர் மற்றும் மேன்மை ஆகியவை நம்மால் தீர்மானிக்க முடியாது. அவர் நம்மை சொந்தம் பாராட்டுகிறார் ! மேலும், அவர் அருகில் இருக்கிறார்.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, என் பிதாவாகிய தேவனே, என்னைச் சுற்றியுள்ள குழப்பம் மற்றும் மோதல்களுக்கு மத்தியில் நான் உமது குணாதிசயமும் மென்மையும் கொண்ட நபராக இருக்க முயலும்போது, ​​தயவுசெய்து எப்போதும் என் அருகில் இருந்தருளும் . உமது பிரசன்னம் தெரியப்படுத்தப்பட வேண்டும் என்றும், நான் செய்யும் மற்றும் சொல்லும் எல்லாவற்றிலும், குறிப்பாக மென்மையுடன் என் குணாதிசயத்தை பிரதிபலிக்க வேண்டும் என்றும் நான் கேட்டுக்கொள்கிறேன். இயேசுவின் நாமத்தினாலே அவர் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து