இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பதட்டம் என்பது நம்மால் கட்டுப்படுத்த முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதும், நம் எண்ணங்களிலிருந்து நீக்க முடியாத விஷயங்களைப் பற்றி கவலைப்படுவதுமேயாகும் . பதட்டம் ஒரு அமைதலான மனதையும், கலங்கிய இருதயத்தையும் ஆதிக்கம் செலுத்தி கட்டுப்படுத்துகிறது, எப்படியென்றால் சந்தேகம், பயம் மற்றும் சஞ்சலத்தால் நிரப்புகிறது. சத்தியம் தெளிவாக உள்ளது. பதட்டத்தை ஒருபோதும் நீக்க முடியாது; மற்ற காரியங்களை கொண்டு மாற்ற வேண்டும். நம் கவலைகளையும், ஏக்கங்களையும் கர்த்தரிடம் கொடுத்து, அவர் நம்மை கவனித்துக்கொள்வார் என்று நம்புவதன் மூலம் நாம் நமது பதட்டங்களை மாற்றுகிறோம். பின்னர், அவர் நம் வாழ்க்கையில் செய்ததற்கும், அவர் என்ன செய்கிறார் என்பதற்கும் நாம் அவருக்கு நன்றி தெரிவிக்கும்போது, ​​அந்த கவலைகளையும் மன ஏக்கங்களையும் ஒப்புவிப்பதன் மூலம் அவரது உண்மையான பிரசன்னத்தின் உணர்வால் அவற்றை மாற்றுகிறோம். இதன் விளைவாக, நமக்கான அவரது எதிர்காலத்தின் மீதான நமது நம்பிக்கை நமக்குத் திரும்பக்கூடும், இது பதட்டத்தை இன்னும் குறைக்கவும், மகிழ்ச்சியின் அதிக எதிர்பார்ப்பிற்கும் வழிவகுக்கும்.

என்னுடைய ஜெபம்

பிதாவே, நீர் என்னை நேசிக்கிறீர் என்பது எனக்குத் தெரியும். நீர் என்னை ஆசீர்வதித்து இரட்சிக்க எவ்வளவோ காரியங்களை செய்திருக்கிறீர் அதற்காக உமக்கு நன்றி . என் இருதயத்தின் கவலைகளையும் வேதனைகளையும் உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன்... (ஒவ்வொருவரும் ஒரு கணம் ஒதுக்கி, இன்று நம் இருதயங்களை பாரமாக்கும் விஷயங்களைக் குறிப்பிட்டு, அவற்றை பிதாவிடம் ஒப்புவிப்போம் .) பிதாவே, என் வாழ்க்கையில் அடியேனை ஆசீர்வதித்த அநேக வழிகளுக்காகவும் நான் உமக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன்... (பரலோகத்தின் தேவனிடமிருந்து நாம் பெற்ற ஆசீர்வாதங்களை குறிப்பாகக் குறிப்பிடுவோம்). இப்போது, ​​அன்பான பிதாவே, தயவுசெய்து என் இருதயத்தை உம்முடைய ஆவியாலும், என் மனதை உம்முடைய பிரசன்னத்தினாலும் மற்றும் சமாதானத்தின் உணர்வாலும் நிரப்புங்கள். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து