இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம் இருதயங்களை எது உண்மையாகக் காக்க முடியும்? நம் சிந்தையை எது உண்மையாகப் பாதுகாக்க முடியும்? தேவன் தம்முடைய சமாதானம் நம் இருதயங்களையும் சிந்தைகளையும் காக்க விரும்புகிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா? இந்தப் பகுதியில் அப்போஸ்தலனாகிய பவுல் நமக்கு அளித்த வாக்குறுதி இதுதான். நாம் எப்போதும் நன்றி செலுத்துதலுடன் நம் வேண்டுகோள்களை தேவனிடம் சமர்ப்பித்தால், தேவ சமாதானம் எந்த விளக்கத்தையும் விட முக்கியமானது, அதைப் புரிந்துகொள்ளும்படி அது நம் திறனை மேம்படுத்தகிறது , மேலும் அது நம் இருதயங்களையும் மற்றும் சிந்தனைகளையும் காத்துக்கொள்ளுகிறது . இது எப்படி உண்மை என்பதற்கு உங்களுக்கு ஒரு உதாரணம் வேண்டுமா? யோபுவின் புத்தகத்தைப் பாருங்கள். அவருக்கு ஏற்படும் அனைத்தும். அவரை காயப்படுத்தும் அனைத்தும். ஆனாலும், அவர் இருதயம் கடினப்படுத்துவதில்லை அல்லது பைத்தியம் பிடிப்பதில்லை. அவரது உயிர்வாழ்வதற்கான திறவுகோல் என்ன? கர்த்தருடனான அவரது தொடர்ச்சியான உரையாடல் - கர்த்தருடைய பிரசன்னத்தை அவர் வெளிப்படையாக அங்கீகரிப்பது. யோபுவுக்கு எவ்வளவு மோசமாக வலித்தாலும், எவ்வளவு குழப்பமடைந்தாலும், அல்லது எவ்வளவு மோசமாக கேலி செய்யப்பட்டாலும் தேவனுடனான தனது உறவை அவர் கைவிடவில்லை . அவரது வாழ்க்கையின் அனைத்து நிச்சயமற்ற தன்மைகள், இழப்புகள் மற்றும் காயங்களுக்கு மத்தியிலும், யோபு தேவனின் பிரசன்னத்தைப் பிடித்துக் கொண்டார் (யோபு 19: 25 மற்றும் 26).
என்னுடைய ஜெபம்
பிதாவே, எனக்கு எப்பொழுதும் நீர் வேண்டும், உம்முடைய நிலையான பிரசன்னத்தின் அமைதியும் வேண்டும். காயங்கள் என் இருதயத்தைத் துளைக்கின்றன, ஆனால் என் இருதயம் கடினப்பட்டு, உணர்ச்சியற்றதாய் மாறுவதை நான் விரும்பவில்லை. சில சமயங்களில், என் மனம் மிகவும் குழப்பமடைந்து, என் பகுத்தறிவை இழந்துவிடுமோ என்று பயப்படுகிறேன். அன்புள்ள பிதாவே, நான் இயேசுவைப் பற்றிக்கொண்டு, என் வாழ்க்கையையும் உமது கிருபையையும் பற்றி உம்மிடம் வெளிப்படையாகப் பேசும்போது, நீர் எனக்கு உமது அமைதியை அருளி, என் இருதயத்தையும் சிந்தனையையும் அழிவிலிருந்து பாதுகாப்பீர் என்று நான் நம்புகிறேன். அன்புள்ள பிதாவே, நான் என் துன்பங்களுடன் போராடும்போதும், உம்முடன் என் வாழ்க்கை பிரயாணத்தில் அடியேனை ஆசீர்வதிக்க நீர் செய்த அனைத்து நல்ல காரியங்களுக்கும் நன்றி சொல்ல வேண்டும் என்பதை நினைவூட்டியதற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே நன்றி செலுத்தி ஜெபிக்கிறேன் . ஆமென்.