இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பரிசுத்தத்திற்கான அழைப்பு, வேதத்தில் வெளிப்படுத்தப்பட்ட தேவனுடைய சித்தத்தை விட மிகவும் வித்தியாசமான தரத்தின்படி வாழும் இவ்வுலகிலே அவற்றை புறக்கணிப்பது மிகவும் எளிதானது. சாத்தான் நம்மைச் சுற்றியுள்ளவர்களுடன் நமது வாழ்க்கை முறையை ஒப்பிட்டுப் பார்த்து, நம் பாவங்களை மதிப்பிழக்கச் செய்கிறான். இருப்பினும், பிரச்சினை நம் பாவங்களை மற்றவர்களுடன் ஒப்பிடுவது மாத்திரமல்ல. இயேசுவானவர் நடப்பித்த கிரியையின் மூலம் சுத்திகரிக்கப்பட்ட நன்றியுள்ள இருதயம், பரிசுத்த ஆவியின் கிரியையின் மூலம் ஒவ்வொரு நாளும் மென்மேலும் நாம் பரிசுத்தத்தின் மேல் பரிசுத்தமடைய வேண்டும், மேலும் இவை அனைத்திற்கும் தேவனின் மகா கிருபையே காரணமாகும். நமது பரிசுத்தத்திற்கான ஆவியானவரின் அழைப்பைப் புறக்கணிப்பது அல்லது குறைப்பது என்பது தேவனையும் அவருடைய வார்த்தையையும் நிராகரிப்பதும் , தேவனின் கிருபையை இழிவுபடுத்துவதும், நம்முடைய பாவங்களுக்காக இயேசுவின் தியாகத்தை மட்டுப்படுத்துவதாகும். நமக்கு கொடுக்கப்பட்ட ஜீவியத்தில் எப்பொழுதும் பரிசுத்த வாழ்க்கையின் மேலேயே ஆர்வமுள்ளவர்களாக இருப்போம், ஏனென்றால் தேவனானவர் விரும்புவதும், இயேசுவுக்குள் அவர் நமக்குக் கொடுத்துள்ள கிருபையான அன்பை நம் இருதயத்தில் மனபூர்வமாக உணர்ந்தால் நாம் தேட வேண்டியதும் செய்ய வேண்டியதும் இது மாத்திரமே .

என்னுடைய ஜெபம்

பிதாவே , அடியேனுடைய பாவங்கள் உம் இருதயத்துக்கு எவ்வாறு விசனம் உண்டாக்குகிறது என்றும், உமக்கு அதிருப்தி அளிக்கின்றன என்று அறிந்தும் அவைகளின் முக்கியத்துவத்தை நீர்த்துப்போகச் செய்ய முயற்சித்ததற்காக அடியேனை மன்னித்தருளும். அடியேனை இரட்சிக்க நீர் நடப்பித்த எல்லாவற்றிற்காகவும் மற்றும் பரிசுத்தமான வாழ்க்கையை வாழ ஆவியானவர் எங்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காகவும் , இன்னுமாய் எங்களுடைய இருதயங்களில் நீர் விரும்புகிற பரிசுத்தத்தை பெற்றுக்கொள்ள ஆர்வத்தை உண்டுபண்ணும்படி நாங்கள் பரிசுத்த ஆவியானவரை எங்கள் இருதயத்திலே வாசம் செய்யும்படி அழைக்கிறோம். இவை அனைத்தையும் இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து