இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு என் பாவங்களுக்காக மாத்திரம் மரிக்கவில்லை; அவர் எனக்காக ஜீவிக்கிறார் . மெய்யாக , அவர் தேவனுடைய வலது பாரிசத்தில் வீற்றிருந்து நம்மை சொந்த ஜனமென்று பார்க்கிறார் (1 யோவான் 2:1-2). என்னைக் இரட்சிப்பதற்காக அவர் தம்மை தாமே மரிக்க ஒப்புக்கொடுத்து , மரணத்தை ஜெயித்து வாழும் இவ்வேலையில் அவர் மற்றயெல்லாவற்றையும் கொடுக்காதிருப்பாரோ?

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும், நீதியும் நிறைந்த பிதாவே, உமது வலது பாரிசத்தில் வீற்றிருக்கும் இயேசு , என் இருதயத்தையும், என் போராட்டங்களையும், என் உலகத்தையும் அறிந்திருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன் .எனது எல்லா சிரமங்கள் மற்றும் வெற்றிகளிலும் உம் நிலையான பராமரிப்பு மற்றும் பாதுகாப்பிற்காக நான் நன்றி கூறுகிறேன். நான் முழு மனதுடன் உமக்கு ஊழியஞ் செய்ய முற்படுவதால் , முன்பை விட இன்று உம் சமூகம் என்னோடு இருப்பதை இன்னும் தெளிவாக காண்பித்தருளும் . இயேசுவின் நாமத்திலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து