இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

யாக்கோபு ஆசிரியர் எப்பொழுதும் நிறைய சத்தியத்தின் காரியங்களை ஒரு சிறிய செய்தியாக நமக்கு தொகுத்து வழங்குகிறார் . பரிசுத்தத்திற்கான இந்த அழைப்பை மையமாக வைத்து அதிலே அதிக கவனம் செலுத்துவோம்: "ஆகையால், தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; .... தேவனிடத்தில் சேருங்கள்..." நம் இருதயங்களை தேவனிடம் ஒப்புக்கொடுத்து அவரிடம் நெருங்கி வருவோம். நாம் தேவனுடைய பிரசன்னத்திற்கு வந்து, அவரிடம் நெருங்கி வரும்போது, ​​அவருடைய பரிசுத்தம், நீதி மற்றும் கிருபையின் வெளிச்சத்தில் நம்முடைய எண்ணங்கள், நோக்கங்கள் மற்றும் நடத்தைகள் என்னவாக இருக்கின்றன என்பதை நாம் அறிந்துக்கொள்வோம் . அதே நேரத்தில், பிசாசானவன் நம் பிதாவின் பரிசுத்தமான மற்றும் நீதியுள்ள குணத்தின் பிரகாசத்தால் நம் சமூகத்திலிருந்து விலகி ஓடிப்போவேன் என்பதை நாம் அறிவோம். முதலாவது தேவனைத் தேடுவோம் - அவருடைய நீதியுள்ள குணம், இரக்கமுள்ள கிருபை , உண்மையுள்ள அன்பு மற்றும் மெய்யான நீதி போன்ற அவருடைய குணாதிசயத்தை தேடுவோம் . தேவனிடம் நெருங்கி ஜீவிப்போம் , நித்தமும் அவருடைய பிரசன்னத்தில் இருக்க ஏங்குவோம், அதனால் நம் அன்றாட வாழ்க்கையில் அவரைப் போலவே மறுரூபமாக முடியும். நம்மைச் சுத்திகரித்து, நம்மைப் பரிசுத்தமாக்கி, முழுவதுமாக அவரைபோலவே ஆக்கும்படி தேவனிடம் மன்றாடுவோம் !

என்னுடைய ஜெபம்

நீதியின் பிதாவே , உம் அன்புக்காகவும் நீர் அளித்த மன்னிப்பிற்காகவும் உமக்கு கோடான கோடி நன்றி. இப்போதும் , ​​அன்பான பிதாவே , நான் உம்மிடம் நெருங்கி வரவும், உம்மை நன்றாக அறிந்து கொண்டு , அதினால் என் அன்றாட வாழ்க்கையில் உம்மை முழுமையாகப் பிரதிபலிக்கவும் ஏங்கும்போது எனக்கு உதவிச் செய்யும் . அடியேனுடைய மாயமாலம் அல்லது இரகசிய பாவத்திலிருந்தும் என் இருதயத்தைச் சுத்தப்படுத்தியருளும் . என் மனசாட்சியைச் சுத்தப்படுத்தி, உமது கிருபையையும் பரிசுத்தத்தையும் எடுத்துக்காட்ட எனக்கு அதிகாரத்தை தாரும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து