இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நம்மை இரட்சிப்பது எது? இயேசுவுக்குள்ளாய் தேவன் நமக்காக என்ன செய்தார்! அந்த நம்பிக்கையின் மீது, அதாவது நாம் இர1ட்சிக்கப்பட்ட அந்த நற்செய்தியின் மீது, நம் நம்பிக்கையையும் அதின் மீது சார்ந்திருப்பதையும் எந்த ஒரு காரியமும் கைவிட நம்மை அனுமதிக்காதபடி உறுதியெடுப்போம் (1 கொரிந்தியர் 15:3-7). இயேசுவின் சீஷர்கள் , கிரியை மற்றும் நற்செய்தியைத் தவிர வேறு எந்த நாமமோ , நபரோ, செய்தியோ நமக்கு மெய்யான இரட்சிப்பைக் கொண்டுவர முடியாது (யோவான் 14:6; அப்போஸ்தலர் 4:12; கலாத்தியர் 1:3-9). நாம் அதனுடன் வேறு எதையும் கூட்டவும் தேவையில்லை. இதிலிருந்து யாரும் எதையும் எடுத்துக்கொள்ள நாம் ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது. இயேசுவுக்குள் தேவனின் கிருபையில் நம்பிக்கை வைப்பது போல, இந்த விசுவாசத்தை உறுதியாகப் பற்றிக் கொள்வோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே, உம்மைத் தவிர வேறு எந்த தேவனையும் நான் நம்பவில்லை. இயேசுவுக்குள் உம்முடைய அன்பும் கிருபையும் நிறைந்த சத்தியத்தை தவிர வேறு எந்த நற்செய்தியையும் நான் நம்பவில்லை. இயேசுவைத் தவிர வேறு எந்த இரட்சகரும் , ஆண்டவரும் இல்லை. பழைய பாடல் மிகவும் அழகாக வேண்டுதல் செய்வது போல, "ஆண்டவரே, உமது அன்பை நான் ஒருபோதும், ஒருபோதும், விடமாட்டேன் ." இயேசுவின் நாமத்தினாலே நான் இந்த காரியத்துக்காக பயபக்தியோடு ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து