இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
சிலர் இயற்கை அன்னையைப் பற்றி பேசுகிறார்கள், ஆனால் வேதம் நமது பிரபஞ்சத்தை நிலைப்படுத்தி , நம் உலகத்தையும் அதில்லுள்ள யாவற்றையும் தாங்கி நிற்கும் வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரைப் பற்றி சொல்கிறது. அவர் ( தேவன் ) பேசுகிறார், அவர்கள் அவருடைய சித்தத்தை செய்கிறார்கள். நம்முடைய ஜெபங்களுக்குச் செவிசாய்த்து, நம்முடைய நலனுக்காகச் செயல்படுகிற தேவனானவர் இவரே. இந்த தேவன் தம்முடைய மக்களை நிலைநிறுத்தவும் , அவருடைய வாக்குத்தத்தங்களை நிறைவேற்றவும் இயேசுவானவரை அனுப்பினார். அவர் தான் நம்மை நித்திய வீட்டிற்கு அழைத்து செல்லும் நம்முடைய கர்த்தர் . சர்வவல்லமையுள்ள கர்த்தராகிய இயேசுவை பற்றிக்கொண்டு, நாம், நம்முடைய எதிர்காலத்தின் மீது நம்பிக்கை கொள்ளலாம் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , நீரே இப்பிரபஞ்சத்தை ஆளுகிறவர் மற்றும் ஒப்பற்றவர். உம்முடைய மகிமையும் ஆற்றலும் என்னுடைய எண்ணங்களுக்கு அப்பாற்பட்டவை . ஆயினும்கூட, தேவனே , நீர் எல்லாம் வல்லவர், ஞானம் நிறைந்தவர் ஆயினும் எங்களுக்கு அருகில் இருப்பதை நான் அறிவேன். இன்று நான் ஜெபிக்கும் என்னுடைய சில விசேஷ நண்பர்களின் அருகில் நீர் இருக்க வேண்டும் ... ( உங்களுடைய ஜெபத்தில் உங்கள் நண்பர்களின் பெயர்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.) இயேசுவின் வல்லமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.