இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

ஆஹா ! என்ன ஒரு வல்லமைமிக்க மற்றும் ஞானம் நிறைந்த சிந்தனை. இயேசுவின் உயிர்த்தெழுதலில் நாம் வைத்திருக்கும் நம்பிக்கையும், அவருடனே என்றென்றும் இணைந்திருப்பதும் மிகவும் முக்கியமானது, மற்ற அனைத்து காரியத்தோடு ஒப்பிடுகையில் அவை ஒன்றுமில்லை . கிறிஸ்துவுக்குள் நமக்கு இருக்கும் நம்பிக்கை, இப்போதும் மாத்திரமல்ல , வாழ்க்கையைத் தாண்டி மரணத்தின் கட்டுகளை உடைக்கும் நம்பிக்கையும் கூட. அது நமக்கு இந்த நம்பிக்கையை வழங்கவில்லை என்றால், பிற்பாடு நம் வாழ்க்கையில் நம்பிக்கை என்பதே இல்லை. பகிர்ந்து கொள்ள நமக்கு எந்த நற்செய்தியும் இல்லை. உலகம் சுயநலம் மற்றும் பாவத்தின் சேற்றில் தொலைந்து போய்விடும் . நாம் ஏமாற்றப்படுவோம் , பரிதபிக்க வேண்டும். ஆனால், கிருபையின் காரணமாக, நான் விசுவாசிக்கிறேன் ! நீங்களும் விசுவாசிப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்! இயேசுவின் அன்பான சீஷரே, அது எல்லாவற்றையும் மாற்றக்கூடியது !

என்னுடைய ஜெபம்

பிதாவாகிய தேவனே, அல்பாவும் ஒமேகாவும், ஆரம்பமும் முடிவும், இயேசுவின் உயிர்த்தெழுதல் மூலம் பாவம் மற்றும் மரணத்தின் மீதான உம் வெற்றி எங்களுடைய பாவம், மரணம் மற்றும் நரகத்தின் மீதான எங்கள் வெற்றியையும் குறிக்கிறது என்று நாங்கள் நம்புகிறோம்! இயேசு எங்களை மரித்தோரிலிருந்து எழுப்பி, உமது பிரசன்னத்தில் நித்திய ஜீவனைப் பகிர்ந்து கொள்வார் என்று நாங்கள் நம்புகிறோம். உமது முகத்தை நேருக்கு நேர் பார்க்கவும் , உமது மகிமையில் பகிர்ந்து கொள்ளவும், உமது நாமத்தை என்றென்றும் துதிக்கவும் நாங்கள் எவ்வளவு ஆவலுடன் காத்திருக்கிறோம் என்பதை எங்கள் அற்பமான மனித வார்த்தைகளில் முழுமையாக வெளிப்படுத்த முடியாது. எனவே, உமது பரலோக ஈவு "ஆவியானவர்தாமே வாக்குக்கடங்காத பெருமூச்சுகளோடு நமக்காக வேண்டுதல்செய்கிறார் , ஆவியானவர் தேவனுடைய சித்தத்தின்படியே பரிசுத்தவான்களுக்காக வேண்டுதல் செய்கிறபடியால், இருதயங்களை ஆராய்ந்துபார்க்கிறவர் ஆவியின் சிந்தனை இன்னதென்று அறிவார். (ரோமர் 8:26-27). இயேசுவின் நாமத்தினாலே நாங்கள் நம்பிக்கைக்காக உம்மைப் போற்றி துதித்து ஜெபிக்கிறோம் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து