இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மறைப்பொருள் நிறைந்த மதக் கருத்துகளின் உலகில், அவர்களைச் சுற்றியுள்ள பளபளப்பான மதங்களும் அந்த மதங்களின் குறிப்பிட்ட நடைமுறைகளும் ஆவிக்குரிய வாழ்க்கை முறையைப் போலுள்ளது என்று உணரும்போது, ​​​​இந்த மதங்கள் இயேசுவின் மூலமாய் தேவன் நமக்கு வழங்கியதன் நிழல் மாத்திரமே என்று கொலோசிய சபையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டுகிறார் . இயேசுவுக்குள்ளாய் , நமக்கு சத்தியம் இருக்கிறது: அதாவது ஆவிக்குரிய சத்தியம் மற்றொன்று மாம்சிக சத்தியம். தேவனுடைய குமாரனாகிய இயேசுவானவர் நம்மில் ஒருவரானார், அதனால் நாம் அவருடன் ஒன்றாக இருக்கவும் அவருடைய மகிமையில் பங்குகொள்ளவும் முடியும். எது சத்தியமோ அவற்றை நாம் இயேசுவிடம் காண்கிறோம்.

என்னுடைய ஜெபம்

ஆண்டவரே, உமது நேசக் குமாரனை என் முழு மனதுடனே பின்பற்ற எனக்கு கவனத்தை தாரும் . இந்த உலகில் அநேக மதக் கருத்துக்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், ஆனால், எனக்காக சிலுவையிலே மரித்ததின் மூலமாக , பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் என்னை இரட்சித்ததினால் நீர் அடியேனை எவ்வளவு நேசிக்கிறீர் என்பதை இயேசுவானவர் மாத்திரமே விளங்கச் செய்தார் என்பதையும் நான் அறிவேன். நான் அவரை நம்புவது மற்றும் பின்பற்றுவது மட்டுமல்லாமல், எனது குணாதிசயமும் அவரை போலவே மறுரூபமாக வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரே மெய்யான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து