இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
மறைப்பொருள் நிறைந்த மதக் கருத்துகளின் உலகில், அவர்களைச் சுற்றியுள்ள பளபளப்பான மதங்களும் அந்த மதங்களின் குறிப்பிட்ட நடைமுறைகளும் ஆவிக்குரிய வாழ்க்கை முறையைப் போலுள்ளது என்று உணரும்போது, இந்த மதங்கள் இயேசுவின் மூலமாய் தேவன் நமக்கு வழங்கியதன் நிழல் மாத்திரமே என்று கொலோசிய சபையிலுள்ள கிறிஸ்தவர்களுக்கு பவுல் நினைப்பூட்டுகிறார் . இயேசுவுக்குள்ளாய் , நமக்கு சத்தியம் இருக்கிறது: அதாவது ஆவிக்குரிய சத்தியம் மற்றொன்று மாம்சிக சத்தியம். தேவனுடைய குமாரனாகிய இயேசுவானவர் நம்மில் ஒருவரானார், அதனால் நாம் அவருடன் ஒன்றாக இருக்கவும் அவருடைய மகிமையில் பங்குகொள்ளவும் முடியும். எது சத்தியமோ அவற்றை நாம் இயேசுவிடம் காண்கிறோம்.
Thoughts on Today's Verse...
In the world of mysterious religious ideas, Paul reminded the Colossian Christians that while the shiny religions around them and the particular practices of those religions might feel like a more spiritual lifestyle, these religions are only a shadow of what God offers us in Jesus. In Jesus, we have reality: spiritual reality and human reality. God became one of us in Jesus so we could be one with him and share in his glory. What is real is what we find in Jesus.
என்னுடைய ஜெபம்
ஆண்டவரே, உமது நேசக் குமாரனை என் முழு மனதுடனே பின்பற்ற எனக்கு கவனத்தை தாரும் . இந்த உலகில் அநேக மதக் கருத்துக்கள் உள்ளன என்பதை நான் அறிவேன், ஆனால், எனக்காக சிலுவையிலே மரித்ததின் மூலமாக , பாவத்திலிருந்தும், மரணத்திலிருந்தும் என்னை இரட்சித்ததினால் நீர் அடியேனை எவ்வளவு நேசிக்கிறீர் என்பதை இயேசுவானவர் மாத்திரமே விளங்கச் செய்தார் என்பதையும் நான் அறிவேன். நான் அவரை நம்புவது மற்றும் பின்பற்றுவது மட்டுமல்லாமல், எனது குணாதிசயமும் அவரை போலவே மறுரூபமாக வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரே மெய்யான இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.
My Prayer...
Give me focus, O Lord, to follow your Son with all my heart. I know so many other religious ideas are out there, but I also know that only Jesus showed how much you love me by dying for me and saving me from sin and death. I want to not only trust and follow him, but I also want my character to be conformed to his. I pray in the name of the only true Savior, Jesus Christ. Amen.