இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"என்னை நானே கண்டு கொள்ள வேண்டும்". இது ஒருபோதும் சாத்தியமாகாது . நம்மை நாமே கண்டுகொள்வது அல்லது நம் ஜுவனை கண்டுபிடிப்பது என்பது இயலாத ஒன்றாகும் . நாம் நம்மைவிட சிறந்த பொருட்களையோ அல்லது நம்மை விட சிறந்த மனிதர்களையோ இழந்தால் மட்டுமே நம் ஜீவனை கண்டுக்கொள்ள முடியும். இயேசுவினிமித்தமாகத் தன் ஜீவனை இழந்து, போகிறவனும், அவருடைய இராஜ்ஜியத்துக்கான கிரியைகளை செய்பவனே அதை இரட்சித்துக்கொள்ளுவான்.
என்னுடைய ஜெபம்
ஜீவனுள்ள மற்றும் சுவாசமுள்ள யாவற்றிற்கும் எஜமானரும், சிருஷ்டிகருமானவரே, என் ஜீவனையும் சுவாசத்தையும் எடுத்து உம் நாமத்தின் மகிமைக்காக பயன்படுத்துங்கள்.இந்த நாளில் என் வார்த்தைகளும் கிரியைகளும் உமக்கு மகிழ்ச்சி கொண்டுவருவதாக இருக்கட்டும். இயேசுவின் மூலம் இந்த ஜெபத்தையும் துதியையும் உமக்கு அர்ப்பணிக்கிறேன் . ஆமென்