இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கை ஏற்ற தாழ்வுகள் , மேடு பள்ளங்கள் நிறைந்தது. இந்த உலகில் நாம் விரும்பும் பல விஷயங்கள், நாம் நேசிக்கும் விஷயங்கள் மரணம், பேரழிவு மற்றும் அழிந்து போகின்ற நிலையினால் பாதிக்கப்படுகின்றன. நாம் வைத்திருக்கும் காரியத்தில் எது நிச்சயம் என்று இருக்கிறது? நாம் யாரிடம் நோக்கி பார்த்து உறுதி பெற முடியும்? நல்ல காலங்களிலும் கெட்ட காலங்களிலும் வெற்றியுடன் வாழ்வதற்கான வல்லமையை நாம் எங்கே காணலாம்? நமக்கு பலம் தரும் கர்த்தரில்! பரிசுத்த ஆவியின் உதவியுடன், நாம் எல்லாவற்றையும் செய்ய முடியும், எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ள முடியும், தேவனின் உதவியுடன் - நமக்கு பலம் தரும் பிதா , குமாரன் மற்றும் பரிசுத்த ஆவி!

என்னுடைய ஜெபம்

சர்வ சிருஷ்டிக்கும் பிதாவாகிய தேவனே , எங்கள் வாழ்க்கையும் நாங்கள் வாழும் சூழ்நிலைகளும் எங்கள் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டவை என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம். எங்களை ஆறுதல்படுத்தவும், பாதுகாக்கவும், வழிநடத்தவும், அதிகாரம் அளிக்கவும் நீர் இருப்பதற்காக உமக்கு நன்றி கூறுகிறோம். உம்முடைய பிரசன்னத்தினால் எங்களுக்குள் வாசம் செய்து எங்கள் உள்ளான மனுஷனை பெலப்படுத்தினதின் காரணமாக, ஒவ்வொரு சூழ்நிலையையும் நம்பிக்கையுடனும் உறுதியுடனும் எதிர்கொள்ள முடியும் என்று நாங்கள் நம்புகிறோம். அன்பான மேய்ப்பரே, நீர் எங்கள் ஒவ்வொருவருடனும் இருப்பதால், உம்முடைய மகிமையில் நாங்கள் உம்முடன் பகிர்ந்து கொள்ளும் மகிமையான நாள் வரை உமக்காக வெற்றிகரமாக வாழ எங்களுக்குத் தேவையான அனைத்தும் எங்களிடம் இருக்கும் என்பதை நாங்கள் அறிவோம். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து