இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் மற்றவர்களை வெறுக்கக்கூடாது என்று நம்முடைய பிள்ளைகளுக்கு சரியாகக் கற்றுக்கொடுக்கும் அதே வேளையில், அநீதி, தீமை, பாரபட்சம் மற்றும் மற்றவர்களை (அந்நியர்கள் , விதவைகள் , திக்கற்றவர்கள் மற்றும் ஏழை எளியவர்கள்) காயப்படுத்தும் வகையில் நடத்துதல் போன்ற காரியங்களை குறித்து தேவன் மோசேயின் ஆகாமங்களிலே விளக்கிக் காண்பித்த யாவற்றையும் நாம் வெறுக்கக் கற்றுக் கொடுக்க வேண்டும். ஏழை மற்றும் பணக்காரர், சொந்த தேசத்தார் மற்றும் அந்நியர்கள் , குடும்பங்களில் உள்ளவர்கள் மற்றும் தனிமையில் உள்ளவர்களுக்கு நியாயமான முறையில் நீதி வழங்கப்பட வேண்டும் என்று தேவன் விரும்புகிறார் என்பதை ஆமோஸ் தீர்க்கதரிசியானவர் இஸ்ரவேல் ஜனங்களுக்கு நினைப்பூட்டினார். இஸ்ரவேலர்கள் இந்த காரியங்களில் தேவனுடைய கட்டளைகளை திரும்பத் திரும்ப புறக்கணித்ததால் , அவர்களுக்கு செல்வம், இராணுவ வலிமை மற்றும் அரசியல் பலம் இருந்தபோதிலும், ஆமோஸின் நாட்களில் அவர்களின் இராஜ்யம் அழிவை சந்தித்தது.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே , நீர் அநேக தேசங்களில் நடக்கும் அநீதியைக் கண்டு கோபமடைந்து, இன்னுமாய் இவ்வுலகத்திலே உள்ள இனவெறியைக் கண்டு கோபமடைந்துள்ளீர்கள் என்பதை நான் அறிவேன். தயவு செய்து உமது மக்களை, உம்முடைய திருச்சபையை , நீதி, சமத்துவம், இரக்கம், அன்பு, இனநலம் மற்றும் நம்பிக்கை ஆகியவற்றின் இடமாக மாற்றுங்கள் . இந்த சிறந்த உலகத்தை உருவாக்க தயவு செய்து என் இருதயத்தையும்,என் கரங்களையும் கொண்டு தொடங்குங்கள். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து