இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
செல்வம், குறிப்பாக பேராசை மற்றும் அநியாய வழிகளில் பெறப்பட்ட செல்வம், ஒன்றுக்கும் உதவாது என்பதை நிரூபிக்கிறது. இந்த வகையான அருவருப்பான செல்வம், அதைப் பெறுபவரின் இதயத்தை கெட்டுப்போக செய்கிறது. இந்த அநியாய செல்வம் நம்மிடம் இருக்கும்போது கூட, அது நம்மை இறுதி அழிவிலிருந்து காப்பாற்ற முடியாது. இருப்பினும், நீதி என்பது மிகவும் விலையேறப்பெற்ற பொக்கிஷம் . உண்மையான நீதி, கிறிஸ்து இயேசுவின் மீதுள்ள விசுவாசத்தின் மூலம் நாம் பெற்ற அவருடைய கிருபையிலிருந்து நமக்குக் கிடைத்த ஈவாக தேவனிடமிருந்து நமக்கு வருகிறது. இந்த நீதி நமது மரணத்தை மேற்கொள்கிறது , நாம் சேர்த்துவைக்கின்ற எந்த செல்வத்தையும் விட பெரியது, மேலும் நம் ஆத்துமாக்களை மரணத்திலிருந்து தப்புவிக்கிறது.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமும் நீதியுமுள்ள பிதாவே, இயேசுவின் தியாகத்தாலும் உமது கிருபையினாலும் என்னை உமது பார்வையில் நீதிமானாக்கியதற்காக நன்றி செலுத்துகிறேன் . என்னுடைய நீடித்த வம்ச வரலாறு என்னுடைய நீதியான குணமாக - நீர் எனக்குக் கொடுத்த குணமாகவும் நீதியாகவும் இருக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் - என்னுடைய அந்தஸ்து, சாதனை அல்லது செல்வமாக அல்ல. என்னுடைய பூமிக்குரிய வாழ்க்கை முடிந்ததும் என்னுடைய சாதனைகள் மறக்கப்படும் என்பதை நான் அறிவேன், ஆனால் நீர் என்னில் பெருக செய்யும் நீதியானது, நான் போன பிறகு தலைமுறை தலைமுறையாக ஒரு ஆசீர்வாதமாகவும் செல்வாக்கு செலுத்துவதாகவும் இருக்கும் என்றும், உம்முடைய மகிமையில் நான் உம்முடன் பகிர்ந்து கொள்ளும்போது எனக்குத் துணையாக இருக்கும் என்றும் நான் முழுமையாக நம்புகிறேன். இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.