இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
இயேசுவினுடைய காலியான கல்லறையை நோக்கி பார்த்துகொண்டிருந்த பெண்களிடம் தேவதூதர்கள் (லூக்கா 24:5) இந்த வார்த்தைகளை கேட்டார்கள், "உயிரோடிருக்கிறவரை நீங்கள் மரித்தோரிடத்தில் தேடுகிறதென்ன?" தேவதூதர்கள் கூறின இந்த வார்த்தைகள் நமக்கு சொன்ன வார்த்தைகளாகவும் இருக்கிறது . இயேசு உயிர்த்தெழுந்தார், ஒரு நாள், நாமும் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுப்பப்படுவோம்: கிறிஸ்துவோ மரித்தோரிலிருந்து, நித்திரையடைந்தவர்களில் முதற்பலனானார். (1 கொரிந்தியர் 15:20, 23). தேவனின் அறுவடை ஒரு நாள் அனைத்து மக்களுக்கும் ஏற்படும் என்று அவர் வாக்கு அளிக்கிறார். விசுவாசிகளாகவும் சீஷர்களாகவும் நாமும் மரணத்திலிருந்து எழுப்பப்படுவோம், மரணம் இனி நம்மை மேற்கொள்ளாது என்பதற்கு அவர் நமக்கு உறுதியளிக்கிறார்! நாம் தேவனின் நித்திய பிள்ளைகள் , மரணம் அவருடைய பிரசன்னத்திலிருந்தும் அன்பிலிருந்தும் நம்மைப் பிரிக்க முடியாது (ரோமர் 8:37-39).
என்னுடைய ஜெபம்
பிதாவே, உம்முடைய மீட்பின் கிருபைக்காக நான் உம்மைத் துதிக்கிறேன். சாத்தானையும், மரணத்தின் மூலம் காயப்படுத்தி அழிக்கும் அவனுடைய வல்லமையையும் நீர் வென்றதினால் நான் மகிழ்ச்சியடைகிறேன். கல்லறையின் மீதான உமது வல்லமைக்காக நன்றி. இயேசுவை மரித்தோரிலிருந்து எழுப்பி, உம்முடன் என்றென்றும் வாழ்வதற்கான உறுதியை எனக்குக் கொடுத்ததற்காக நன்றி. அன்புள்ள பிதாவே, நீர் இப்போது என்னில் செயல்படும் வல்லமையை பிரதிபலிக்கும் ஒரு வாழ்க்கையை எனக்கு அருளிச் செய்யும். இயேசுவின் நாமத்தினாலே இவைகளுக்காக ஜெபிக்கிறேன். ஆமென்.