இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கடைசி நேரம்! அப்போதுதான் எல்லாம் எண்ணப்பட்டு, கதவுகள் பூட்டப்பட்டு, இறுதி எண்ணிக்கை செய்யப்படுகிறது. இறுதி நேரத்தின் ஆண்டவர் இயேசுவானவரே . சிலுவையிலே இன்னுமாய் காலியான கல்லறையுடன் (கொலோசெயர் 2:12-15) மரணம் மற்றும் பாவத்தின் மீது அவர் வெற்றி பெற்றாலும், அவருடைய வெற்றிப் பயணத்திலே சேர்க்கப்பட நாம் இன்னும் காத்திருக்கிறோம். அந்த நாள் வருகிறது. ஒவ்வொரு முழங்காலும் முடங்கும், ஒவ்வொரு நாவும் இயேசுவின் வல்லமை, மகிமை மற்றும் ஆட்சியை அறிக்கையிடும் (பிலிப்பியர் 2:10-11). ஒவ்வொரு தீய சக்தியும் அழிவை எதிர்க் கொள்ளும். இருப்பினும், தேவனுக்கு கீழ்ப்படிந்த இருதயங்கள் என்றென்றும் அவருடைய அன்பான மற்றும் வலிமைமிக்க கரங்ககளில் வைக்கப்பட்டு அவருடைய மகிமையில் பங்கு பெறும் (கொலோசெயர் 3:3-4). எங்கள் கர்த்தர் வெற்றி சிறந்ததார் !
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள தேவனே , கிருபை மற்றும் இரக்கத்தின் பிதாவே, நீர் எங்கள் மீது காண்பித்த இரக்கத்திற்காகவும், பொறுமைக்காகவும் நான் நன்றி . செலுத்துகிறேன் , பிதாவே, பூமியிலும் நரகத்தின் சக்திகளுக்கும் எதிராக உம் வல்லமையும் பராக்கிரமத்தையும் முழுமையாகப் பயன்படுத்தப்படும் என்பதை அறிந்து நான் ஆறுதல் அடைகிறேன். இயேசு தனது ஆட்சியை நிலைநாட்டுவார், பொய்யான, தீய மற்றும் துன்மார்க்கமான அனைத்தையும் அழிப்பார் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியடைகிறேன். மாரநாதா! அந்த நாளும், நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவும் விரைவில் வரட்டும்! இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.