இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
எபேசியர்களும் கொலோசெயர்களும், எந்த மனுஷரும் , அல்லது மனுஷ குழுக்களே ஆயினும் கூட திருச்சபையின் தலையாக ஆகமுடியாது என்பதை வலியுறுத்துகின்றனர். இயேசுவானவர் மாத்திரமே சபையின் தலையாய் இருக்கிறார் . அவர் நாம் போக வேண்டிய திசையை காண்பிக்கிறார் . அவர் நமக்கு மாதிரியாய் இருக்கிறார் . ஊழியத்திற்கும் மற்றும் தேறினவன் ஆவதற்கும் கிறிஸ்துவே நம்முடைய இலக்கு. இயேசுவும் தம்முடைய திருச்சபையில் உள்ளவர்களுக்கு ஈவுகளை கொடுக்கிறார் , மேலும் அவர் தேர்ந்தெடுத்தபடி நம்மைத் தம்முடைய சரீரத்திலே இணைய செய்கிறார், ஒருவரையொருவர் ஆசீர்வதிக்கவும் தேவனை கனப்படுத்தவும் இன்னுமாய் தமக்கு பிரியமானவருக்கு அவர் விரும்பும் வரங்களை தருகிறார். எனவே நாம் யாவரும் நம்முடைய இருதயத்தை இயேசுவையே நோக்கி வைப்போம். அவருடைய வாழ்க்கையையும் அன்பையும் பயன்படுத்தி நம்மை நாமே எப்படி உற்சாகப்படுத்திக்கொள்ளவேண்டுமென்றும், எப்படி ஊழியம் செய்வது என்றும் மற்ற யாவருக்கும் காண்பிப்போம் . அவருக்கு நம் முழு விசுவாசத்தையும், நம்பிக்கையையும் கொடுப்போம். அவர் ஒருவரே அவருடைய சரீரமான சபைக்கு தலையாய் இருக்கிறார் . அவர் நம்மை எப்பொழுதும் வழிநடத்த இடமளிப்போம் !
என்னுடைய ஜெபம்
நீதியுள்ள பிதாவே , இயேசுவுக்காக நன்றி. அவருடைய மாதிரி, ஊழியம் , கீழ்ப்படிதல், அன்பு மற்றும் தியாகத்திற்காக நன்றி. இன்று உங்கள் திருச்சபையிலும் என் வாழ்விலும் அவர் உயிர்த்தெழுதல், மேன்மை, வல்லமை மற்றும் மாறாத பிரசன்னத்திற்காக நன்றி. பிதாவே, தயவு செய்து என்னையும் கிறிஸ்துவில் உள்ள என் சகோதர சகோதரிகளையும் என்னுடன் பயன்படுத்தி, நம் உலகில் அவருடைய ஊழியத்தை செய்யவும், இழந்தபோன ஜனங்கள் யாவருக்கும் உமது கிருபையைப் பகிர்ந்து கொள்ள உதவிச் செய்யும் . கர்த்தராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.