இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

சமீபத்தில் பிரிந்த ஒரு நண்பர் அல்லது அன்புக்குரியவரின் கல்லறைக்கு அருகிலே நீங்கள் எத்தனை முறை நின்றிருக்கிறீர்கள்? அது நம்மை காயப்படுத்துகிறது ! நீங்கள் மிகவும் நேசித்த ஒருவரிடமிருந்து துக்கத்தையும் பிரிவையும் கடைசியாக எப்போது ருசித்தீர்கள்? ஐயோ! அது மிகவும் வேதனை அளிக்கிறது! உங்களைப் பற்றி எனக்குத் தெரியாது, ஆனால் பரிசுத்த வேதாகமம் மரணத்தை இயேசுவின் எதிரிகளில் ஒன்றாக அடையாளம் காட்டியதற்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். இயேசு மரணத்தையும் அது ஏற்படுத்தும் சேதத்தையும் பிரிவையும் வெறுக்கிறார் என்பதற்கு நான் நன்றியுள்ளவனாக இருக்கிறேன். நான் மகிழ்ச்சியடைகிறேன்! ஏன்னென்றால் கர்த்தர் என்னை விட மரணத்தை மிகவும் வெறுக்கிறார், பூமிக்கு வந்து மரணத்தில் நம்மீது உள்ள தீயவனின் அதிகாரத்தை அழிக்க மரணத்தை அனுபவித்தார். இயேசு நமக்கு அழியாமையையும் ஜீவனையும் கொடுக்கும்போது மரணம் இறுதியில் அழிக்கப்படும் என்பதை அறிந்து நான் மகிழ்ச்சியினால் நிரப்பப்பட்டேன், இதனால் நாம் என்றென்றும் அவருடைய மகிமையில் பங்கு கொள்ளலாம்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள பிதாவே, உணர்ச்சிமிக்க , ஆவிக்குரிய மற்றும் சரீர பிரகாரமான நோய் மற்றும் மரணத்துடன் போராடிக்கொண்டிருக்கும் எனக்குத் தெரிந்தவர்களின் வாழ்க்கையில் ஜீவனாலும் இரக்கத்தினாலும் வெற்றிபெறச் செய்யும். உமது வல்லமையாலும் மற்றும் கிருபையினாலும் அவர்களின் வாழ்க்கையில் வெற்றிபெறச் செய்யும். அன்புள்ள பிதாவே, மரணம் இனி இல்லாத நாளை நான் எதிர்நோக்குகிறேன். கர்த்தராகிய இயேசுவே, உமது நாமத்தில் இதை நான் ஜெபிப்பது மட்டுமல்லாமல், உமது சீஷர்கள் அனைவருக்கும் இந்த வெற்றி நாளை விரைவுபடுத்தும்படி கேட்டுக்கொள்கிறேன்! ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து