இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசு உங்களை குறித்து பெருமைப்பாராட்டுவதை கற்பனை செய்து பாருங்கள்! பூமியில் உள்ள மற்றவர்களுக்கு முன்பாக நாம் அவரை அறிக்கையிட்டால் , அவர் பரலோகத்தில் நமக்காகப் பரிந்து பேசுவார் என்று வாக்களித்திருக்கிறார் . இயேசுவை நம் ஆண்டவராக அறிக்கையிடுவது சத்தியத்தை ஏற்றுக்கொள்ளுவதாகும் . ஆனால் விசுவாசிகளுக்கு, இது அதை விட அதிகம், ஏனென்றால் இயேசுவின் வருகையின் நாள் நெருங்கும்போது ஒவ்வொருவருடைய முழங்கால்களும் முடங்கும்படியாகவும் ஒவ்வொருவருடைய நாவும் அவருடைய நாமத்தை அறிக்கையிட்டு, நம் இருதயத்திலே விசுவாசித்தால் இரட்சிக்கப்படுவோம் . விசுவாசிகளாகிய நம்மைப் பொறுத்தவரை, இயேசுவை அறிக்கையிடுவது என்பது அவருடைய ஜெயத்திலே நாம் பங்கடைவோம் என்று எதிர் நோக்குவதாகும் .

என்னுடைய ஜெபம்

வல்லமையுள்ள தேவனே , உமது குமாரன் எனது ஆண்டவராயிருக்கிறார் . அவருடைய மீட்பின் பலிக்காக நான் அவரை அன்புகூறுகிறேன்.இன்னுமாய் அவரைப் போற்றுகிறேன். மரணத்தையும், கல்லறையையும் அவர் வெற்றிசிறந்ததினாலே நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். அவருடைய பலியையும் மற்றும் வெற்றிகரமான கிருபையையும் கண்டு நான் வியக்கிறேன். கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர் . இது உம் காதுகளில் இனிமையாக ஒலிக்கிறது என்பதை நான் அறிவேன், அதனால் நான் மீண்டும் சொல்கிறேன், கர்த்தராகிய இயேசுவே ஆண்டவர். இயேசுவே, நீரே மகா மேன்மையான பலியாகும் அளவுக்கு பெரியவராக இருப்பதற்காக நன்றி செலுத்துகிறேன் . என் ஆண்டவரும் இரட்சகருமான இயேசுவின் நாமத்தினாலே நான் இந்த நன்றியைச் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து