இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கிறிஸ்தவர்களாகிய நாம் மரித்தாளும் , நாம் நித்தியமாக மரிப்பதில்லை ! நமது மாம்ச சரீர மரணம் என்பது நமக்கு அழியாத சரீரத்தை கொடுக்கப்படுவதைக் குறிக்கிறது. கிறிஸ்து நம்மை எழுப்பி அழியாத மேனியை நமக்கு உடுத்துவார் . நாம் தேவனின் பிள்ளைகள் என்பதால் மரணம் நம்மை ஒருபோதும் கட்டிப்போடாது . மகிமையான கர்த்தராகிய இயேசுவைப் போல நாம் இருப்போம், அவர் உண்மையிலேயே இருப்பது போல் அவரைப் நித்திய கண்களால் தரிசிப்போம் . ஜெயம் நம்முடையது. மரணத்திற்கு இறுதி வார்த்தை இல்லை. இயேசுவுக்கும் உண்டு. ஒரு நாள் அவர் நம்மிடம், "எழுந்திருங்கள்!" என்று கூறுவார்.
என்னுடைய ஜெபம்
பிதாவே, என்னுடைய பூமிக்குரிய சரீரம் அழிந்துப்போகக்கூடியது என்பதை நான் அறிவேன். அன்புள்ள பிதாவே, நான் எவ்வளவு நல்ல நிலையில் இருந்தாலும் சரி, என் உடல்நலத்தைப் பற்றி எவ்வளவு கவனமாக இருந்தாலும் சரி, என் உடலில் ஏற்படும் சரீர மரணத்தை என்னால் நிறுத்த முடியாது என்பதை நான் அறிவேன். ஆனால், என்னுடைய சரீர உடல் தோல்வியடைந்தாலும், நீர் தோல்வியடைய மாட்டீர்கள் என்பதை அறிந்து நான் உற்சாகமாக இருக்கிறேன். என்னுடைய மனித சரீரம் அழிதுபோகக்கூடியதாக இருந்தாலும், நீர் வல்லமையுள்ளவர் , வெற்றிகரமானவர் என்பதை நான் அறிவேன். பிதாவே, என் மறுரூபகத்திற்காகவும், எனக்காகவும் இயேசுவானவர் மகிமையினாலும், வல்லமையினாலும் மரணம் விழுங்கப்படும் ஜெய நாளை நான் எதிர்நோக்குகிறேன். அந்த நாள் வரை, அன்புள்ள தேவனே , உம்மை முகமுகமாய் காண ஆவலுடன் மகிழ்ச்சியுடன் உமக்கு ஊழியம் செய்கிறேன். இயேசுவின் வல்லமைமிக்க நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.