இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

பலர் இந்த மேற்கோளை டாக்டர் மார்ட்டின் லூதர் கிங், ஜூனியர் சொன்னார் என்று கூறினாலும், இது டாக்டர் மார்ட்டின் லூதர் கிங் மேற்கோள் காட்டியதை விட 2600 ஆண்டுகளுக்கு முன்பு முதன் முதலில் தேவனுடைய தீர்க்கதரிசியாகிய ஆமோஸால் சொல்லப்பட்டது. இரக்கமும், பண்பும், அக்கறையும் கொண்ட ஒரு வாழ்க்கை அவர்களிடம் இல்லை என்றால், அவர்களுடைய ஆத்தும பயணம் , பரிசுத்த காணிக்கை மற்றும் துதி பாடல்கள் ஆகிய இவைகளால் அவர்களுக்கு பயன் ஒன்றுமில்லை என்பதை தேவனுடைய ஜனம் தெரிந்து கொள்ள வேண்டும் என்று தேவனானவர் விரும்பினார். வடக்கிலே வாழ்ந்த இஸ்ரவேல் ஜனங்கள் ஆமோஸை நம்பவில்லை, மனந்திரும்பவில்லை. அவர்கள் சில ஆண்டுகளுக்குள்ளே முற்றிலுமாய் அழிக்கப்பட்டனர், ஏனென்றால் தேவன் அவர்களின் கபடம் , அநீதி நிறைந்த வாழ்க்கை மற்றும் பலவீனமானவர்களை ஒடுக்குவது போன்ற குணாதிசயங்களை அவர்கள் பெற்றிருந்தார்கள் . ஆனால் நாம் இந்தகாலத்திலே வாழ்கிறோம், இந்த வார்த்தைகள் அந்த நாட்களில் இருந்ததைப் போலவே சக்திவாய்ந்தவை மற்றும் தெளிவானவை யாகும் ! நியாயம் தண்ணீரைப்போலவும், நீதி வற்றாத நதியைப்போலவும் புரண்டு வரக்கடவது. ஆகையால் இதற்கு நம்முடைய மறு மொழி என்னவாக இருக்கும்?

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம்முடைய பிள்ளைகளில் பலர் இன்று நம் உலகத்திலும் நம் தேசங்களிலும் உள்ள அநீதியைக் கண்டு வெட்கப்படுகிறார்கள். குணாதிசயத்திலே மறுபடியும் பிறக்க அவர்களை வழிநடத்த எங்களை எடுத்து பயன்படுத்தும் . மேலும் பிதாவே, நாங்கள் யாவரும் பரிசுத்த ஜீவியத்தை வாழ முற்படுகையில், உமது நீதியுள்ள குணாதிசயம் , கிருபை நிறைந்த இரக்கம் , மெய்யான அன்போடு கூடிய நீதி ஆகியவற்றின் மீது எங்கள் கண்கள் எப்பொழுதும் நோக்கி கொண்டிருக்கும்படி செய்யும் . ஆண்டவரே, உமது அன்பை அறிந்து உமது இரட்சிப்பைப் பெற வேண்டியவர்களுடன் இதே குணநலன்களை நாங்கள் யாவரும் வெளிப்படுத்த எங்களுக்கு உதவியருளும் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து