இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நித்தியமாக இருப்பது ஒன்றும் புதிதல்ல. முற்றிலும், நித்தியமாகவும், இயேசுவைப் போலவும் இருப்பது புதியதாக இருக்கும். ஆனால் இயேசு மரண நித்திரையிலிருந்து உயிர்த்தெழுந்த அந்த நொடிப்பொழுதில் மகிமை நம்மை ஒப்புரவாக்கியது , மரணம் இனி நம்மைக் மேற்கொள்ள மாட்டாது என்ற வாக்குத்தத்தம் நமக்கு கொடுக்கப்பட்டது . சிலுவை மரணத்தின் ஒரு முக்கியமான காரியம் என்னவென்றால் நாம் நம் பாவத்திற்காக இயேசு கிறிஸ்துவுடன் ஞானஸ்நானத்திலே மரிப்பதாகும் . இந்த மரணத்தில் நாம் பங்கு பெற்றிருந்தால், நிச்சயமாகவே அவருடைய உயிர்த்தெழுதலிலும் பங்கு பெறுவோம் (பார்க்க ரோமர் 6:1-14).
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமை மிக்க தேவனே, உமது கிருபையினாலும், உம் குமாரனாகிய இயேசு கிறிஸ்து மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்ததினாலும், நான் உம்மை முகமுகமாய் பார்ப்பேன் என்று அறிவேன். எவ்வாறாயினும், இந்த உயிர்த்தெழுந்த வாழ்க்கையை முன்பிருந்த நாட்களை விட இன்றிலிருந்தே அதிகமாக இயேசுவைப் போல பரிசுத்தமாய் வாழ இப்போதே எனக்கு உதவியருளும் . உயிர்த்தெழுந்த ஆண்டவராகிய இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபம் செய்கிறேன். ஆமென்.