இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மாபெரிதான தேவனைக் குறித்து நாம் அறிந்தவை நமது சிறிய மூளைக்குள் அடங்கியிருக்கிறது , அவைகள் நாம் வாழ்கிற நாட்களில் பெற்றுக்கொண்ட சிறிய அனுபவங்கள், வேதாகமத்தில் சொல்லப்பட்ட தேவனுடைய மகத்தான செயல்களைப் பற்றி நாம் விருப்பமுடன் படித்ததான சில காரியங்கள் மற்றும் நம் முன்னோர்களாகிய கிறிஸ்தவர்களின் வாழ்க்கையில் அவருடைய அதிசயமான கிரியைகளைக் கேட்பது ஆகியவற்றுடன் மட்டுமே உள்ளது. நம்முடைய தேவனை தொழுதுக்கொண்டு , கீழ்ப்படிந்து , அவருடைய காரியத்தை நிறைவேற்றிய மற்றும் அனுபவத்தினால் அறிந்தவர்களின் மூலமாய் அவருடைய வல்லமையை அனுபவித்த நம்முடைய மூத்த கிறிஸ்தவர்கள் , கிருபையினால் நிறைந்த சகோதரன் அல்லது சகோதரி சொல்வதைக் கேட்பது போல வேறு எதுவும் சிறந்ததாக இருக்காது . வருங்கால சந்ததியினருடன் இயேசுவைக் குறித்ததான நம் நம்பிக்கையையும் அனுபவத்தையும் பகிர்ந்துக்கொள்ளும்படி உறுதி ஏற்போம்!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , உம்முடைய கிருபையினால் , நான் உம்மை அப்பா பிதாவே என்று அழைக்கிறேன், இது ஒரு சிறு பிள்ளை தன் தகப்பனோடு உள்ள நெருக்கத்தையும், அவரை சார்ந்து இருப்பதையும் வெளிப்படுத்துகிறது. இருப்பினும், உமது மகாமேன்மையான மகத்துவம் என் புரிந்துகொள்ளும் திறனுக்கு அப்பாற்பட்டது, மேலும் உமது வல்லமை என் புரிந்துகொள்ளும் திறன்களுக்கு அப்பாற்பட்டது. அன்புள்ள தகப்பனே, நான் உம்மை குறித்து அறிந்தவை, சர்வவல்லமையுள்ள தேவனே நாங்கள் உம்மைப் குறித்து புரிந்துகொண்டவை யாவும் , உம்மை பணிவுடனும் வணக்கத்துடனும், பயபக்தியுடனும் பாராட்டுதலுடனும் உமக்கு முன்பாக என்னை முழங்காற்படியிடச் செய்கிறது . உம்முடைய மகிமையை அணுகக்கூடியதாகவும், என் மரணத்தை மீட்டெடுக்கக்கூடியதாகவும் ஆக்கும் உமது மகா மேன்மையான அன்பு, கிருபை மற்றும் இரக்கத்திற்காக நன்றி செலுத்துகிறேன் . இயேசுவின் நல்ல நாமத்தினாலே ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து