இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இந்த உலகில் நமது சரீர ரீதியான, மனித வாழ்க்கையை முடிவுக்குக் கொண்டுவரும் வல்லமை மரணத்திற்கு உண்டு. இந்த உலகில் நம் அன்புக்குரியவர்களை நம்மிடமிருந்து பிரிக்கும் வல்லமை மரணத்திற்கு உண்டு. நம்மை ஊக்கப்படுத்தவும் தோற்கடிக்கவும் மரணத்திற்கு வல்லமை உண்டு. ஆனால் நாம் உண்மையை அறிவோம்: இயேசு மரணத்தின் மீது வெற்றிகரமாக ஜெயித்தார் ! அவர் வாழ்வதால், நாம் அவருடன் வாழ்வோம் என்பது நமக்குத் தெரியும். மரணத்தின் மீதான அவரது வெற்றி மரணத்தின் மீதான நமது வெற்றி என்று நாங்கள் நம்புகிறோம். எனவே, இயேசுவைப் போலவே, மரணத்தையும் அதன் இறுதியில் நம்மை அழிக்கும் வல்லமையையும் நாங்கள் கேலி செய்கிறோம். இயேசுவானவர் நற்செய்தியின் மூலம் மரணத்தை அழித்து நம்மில் அழியாமையை உயிர்ப்பித்தார். எனவே இயேசுவின் உயிர்த்தெழுதலில் பரலோக தேவதூதர்களுடன் சேர்ந்து மரணத்தை கேலி செய்கிறோம்: "மரணமே! உன் கூர் எங்கே? பாதாளமே! உன் ஜெயம் எங்கே? " இயேசுவின் உயிர்த்தெழுதலின் வல்லமையினால் நாம் மரணத்தின் மீது வெற்றி பெற்றுள்ளோம்!

என்னுடைய ஜெபம்

பிதாவே, நான் நேசிக்கிறவர்களின் மரணம் இன்னும் என்னை வேதனைப்படுத்துகிறது என்பதை ஒப்புக்கொள்கிறேன். அவர்களிடமிருந்து நான் பிரிவது சிறிது காலத்திற்கு மட்டுமே என்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இருப்பினும், நான் நேசிக்கிறவர்களிடமிருந்தும் உம்மை நேசிப்பவர்களிடமிருந்தும் மரணம் என்னை நீண்ட காலத்திற்குப் பிரிக்காது என்பதற்காக நான் உமக்கு நன்றி கூறுகிறேன். இயேசுவுக்குள் இந்த வெற்றியை, இந்த உறுதியை எனக்குக் கொடுத்ததற்காக நன்றி. இயேசுவே, மரணத்தைத் ஜெயித்ததற்காக நன்றி. உம்முடைய விலையேறப்பெற்ற மற்றும் வெற்றிகரமான நாமத்தில், என் இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் மூலமாய் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து