இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

வாழ்க்கை நம்முடையது! மரணம் இனி நம்மைச் சிறைபிடிப்பதில்லை! நம்முடைய இரட்சகரும் ஆண்டவருமான இயேசு கிறிஸ்துவின் மூலம் தேவன் நமக்கு ஜெயத்தை கொடுத்திருக்கிறார். வேறு என்ன சொல்லக் கூடும் ? "தேவனுக்கு மகிமை உண்டாவதாக !" "அல்லேலூயா!" "நன்றி, இயேசுவே !"

என்னுடைய ஜெபம்

இயேசுவை அனுப்பியதற்காக நன்றி, பிதாவே. அவரை மரித்தோரிலிருந்து எழுப்பியதற்காக நன்றி, சர்வவல்லமையுள்ள தேவனே . நான் உமக்காக ஊழியம் செய்யும்போது, ​​அவருடைய வாழ்க்கை என்னுள் ஜீவனோடு இருக்கிறது என்ற உறுதிப்பாட்டிற்காக நன்றி. என் வாழ்க்கை வீணாக போகாது என்பதற்காக நன்றி. நான் என்றென்றும் ஜெய வீரனாக உம்மிடம் நித்திய வீட்டிற்குச் செல்வேன் என்ற உறுதிப்பாட்டிற்காக நன்றி! இயேசுவின் நாமத்தினாலே , உம்மைத் துதித்து, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து