இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் நமக்கு அடைக்கலமாகவும், பெலனாகவும் இருப்பார் என்று வாக்களித்துள்ளார் . உணர்ச்சிகரமான பிளவுகள், பேரழிவுகள் மற்றும் பேரலைகள் நம் வாழ்க்கையை மூழ்கடிக்கும்போது நாம் தனித்துவிடப்படுவதில்லை அல்லது கைவிடப்படுவதில்லை என்பதை நம்புவதே ஒரு பெரிய சவாலான காரியமாகும் . தேவன் நம் பாதுகாவலர் மற்றும் நமக்கு உதவிச் செய்பவர் மாத்திரமல்ல . நம் உலகமும் அதிலுள்ள யாவும் நம்மைச் சுற்றி விழுவது போல தோன்றினாலும் அவர் எப்பொழுதும் நம்முடனே இருக்கிறார். அவர் நம்மை மரணத்திலிருந்து காப்பாற்றுவார் அல்லது அவருடைய மரணத்தின் மூலமாய் நம்மை மீட்டு அவருடன் சேர்த்துக்கொள்ளுவார் . அவர் நம்மை தீமையிலிருந்து விடுவிப்பார் அல்லது தீமையை வெல்ல நமக்கு அதிகாரம் அளிப்பார். நம் வாழ்க்கையில் என்ன நடந்தாலும் நாம் பயப்பட வேண்டிய அவசியமில்லை ஏனென்றால் தேவன் நமக்கு அடைக்கலமும் பெலனுமாய் இருக்கிறார்!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமுள்ள தேவனே, வாழ்க்கையில் உண்டாகும் பூகம்பங்களுக்கு நடுவில் இருப்பவர்களுக்காக நான் ஜெபிக்கிறேன். நான் யாருக்காக கவலைப்படுகிறேன் என்பதை நீர் அறிவீர். சமாதானப்படுத்த முடியாத அளவுக்குப் பிரச்சனை பெரியதாகவும், உண்மையிலேயே என்னால் ஆறுதல் அளிக்க முடியாத அளவுக்கு வேதனை நிறைந்திருப்பவர்களுடைய போராட்டங்களில் நான் அக்கறை காட்டுகிறேன் என்பது உமக்குத் தெரியும். நீர் அவர்களோடிருந்து அவர்களை ஆசீர்வதித்து இப்போது அவர்களுடைய பிரச்சனைகளிலிருந்து விரைவில் அவர்களை விடுவிக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். நீர் மாத்திரமே எங்கள் மெய்யான நம்பிக்கை, இயேசு ஒருவரே எங்கள் உறுதியான மீட்பர். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறோம். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து