இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பங்குச் சந்தை நிலையற்றதாக இருக்கலாம். நண்பர்கள் நம்மை ஏமாற்றலாம். ஒன்று மற்றொன்றை விட சிறந்தது, நம்முடைய மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு நபர் - இயேசுவைத் தவிர வேறு எதுவும் உண்மையிலேயே உறுதியாக இல்லை! அவருடைய கிரியை , அன்பு, கிருபை, வல்லமை மற்றும் திட்டத்தின் மீது நம் வாழ்க்கையை கட்டியெழுப்பினால், நாம் உறுதியாகவும், விடாமுயற்சியுடனும், வெற்றி பெறவும் முடியும், ஏனென்றால் நாம் கர்த்தருக்காகவும், கர்த்தருடைய உதவியுடனும் செய்வது நித்தியத்திற்கு முக்கியமானது. அது வீணாக செய்யப்படும் வேலையாக இருக்காது. ஏன்? ஏனென்றால் கர்த்தர் மரித்தோரிலிருந்து உயிர்த்தெழுந்து நம் வாழ்வில் அனுதினமும் செயல்படுகிறார்!
என்னுடைய ஜெபம்
பிதாவே, எனக்கு தைரியத்தையும் பெலத்தையும் தயவுக்கூர்ந்து ஆசீர்வதித்து அருள்வீராக. தேவனே உமது மகிமைக்குள் என்னைக் கொண்டு வர உமது நேச குமாரன் மீதுள்ள என் நம்பிக்கையையும் விசுவாசத்தையும் விட்டு விலகாமல், பூமியில் நான் செய்த கிரியையை நிலைத்திருக்கச் செய்து, எனக்குப் பின் வருபவர்களை ஆசீர்வதியும்படி எனக்கு அதிகாரத்தை தாரும் . இயேசுவின் நாமத்தினாலே நான் நம்பிக்கையுடன் ஜெபிக்கிறேன். ஆமென்.