இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

நாம் இயேசுவின் சீஷர்களாக மாறும்போது தேவன் நம்மைப் புதியவர்களாய் மாற்றுகிறார்.(2 கொரிந்தியர் 5:17). எவ்வாறாயினும், நம்மில் பெரும்பாலோர் சில தருணங்களில் அந்த பழைய வாழ்க்கை முறையை வெளிக்கொண்டுவந்து அது நமக்குள் இருப்பதை வெளிப்படுத்த விரும்புகிறோம் , மேலும் நம்மை மறுபடியுமாய் அந்த பழைய வாழ்க்கை முறைக்கு அழைத்து செல்ல முயற்சிக்கிறோம். எனவே, புதிய மனிதனாய் வாழ்வது என்பது நம்முடைய வாழ்நாளில் எடுக்கப்பட்ட சிறந்த முடிவை , நாம் ஒவ்வொரு நாளும் செய்ய வேண்டிய ஒன்றாகும், நம்மை தேவனுக்கு முழுமையாக அர்ப்பணித்து, நம் பழைய மனுஷனை களைந்துவிட்டு , நம்மை புதுப்பிக்க பரிசுத்த ஆவியானவரின் ஒத்தாசையை கேட்கவேண்டும் (ரோமர் 12:1-2). எபேசியரின் புஸ்ததம் முழுவதும் நாம் பார்ப்போமானால் , பவுலானவர் பரிசுத்த ஆவியானவரின் வல்லமை நம்மில் கிரியை நடப்பிப்பதை பற்றி பேசுகிறார் (எபேசியர் 1:17-20, 3:14-21, 5:15-21). இயேசுவின் வார்த்தையை பின்பற்றுவதற்கு நாம் தினமும் உறுதியளிக்கும்போது, ​​பரிசுத்த ஆவியானவர் மென்மேலும் அவரைப் போல இருக்க நம்மைப் பெலப்படுத்தி தேறினவர்களாக நம்மை மாற்றுவார். (எபேசியர் 4:12-16; 2 கொரிந்தியர் 3:18). இயேசுவுக்குள் நம் வாழ்வின் புதுமை ஒருபோதும் பழையதாகவோ அல்லது கெட்டுப்போனதாகவோ வேண்டியதில்லை!

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே மற்றும் அன்பான பரலோகத்தின் பிதாவே , இன்று நான் ஒரு புதிய நபராக வாழ முற்படுகையில், தயவுசெய்து என்னை ஆசீர்வதித்தருளும் - உமது பரிசுத்த ஆவியால் சுத்திகரிக்கப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்டு, அதிகாரம் கொடுக்கப்படுகிறது . எனது பழைய பழக்கவழக்கங்களையும் ஆசை இச்சைகளையும் நான் வேண்டுமென்றே ஒதுக்கிவைத்து , அப்பொழுது எனக்கு ஒரு புதிய மனுஷனையும் மற்றும் சுத்தமான ஆவியையும் எனக்கு தாரும். இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து