இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
" அல்லேலூயா! " இது தேவனை ஸ்தோத்திரிக்கும் ஒரு சங்கீதம்! "அல்லேலூயா!" என்ற எபிரேய வார்த்தையின் எங்களுடைய மொழியுள்ள அர்த்தமானது " தேவனுக்கு மகிமையுண்டாவதாக ". ஆனால் "அல்லேலூயா !" என்று பாடுவதன் மூலமோ அல்லது கூச்சலிடுவதன் மூலமோ நாம் உணரும் அந்த பரலோக உணர்வை அது நிச்சயமாக எடுத்துச் செல்வதாகத் தெரியவில்லை. இந்த சங்கீதத்தில் நான் விரும்புவது இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஸ்தோத்திர பரிமாணங்கள்: என் ஆத்துமா , என் வாழ்நாள் முழுவதும், என் ஜீவிய காலம் வரைக்கும். சங்கீதக்காரன் , அவரை அனல்மூட்டி எழுப்பிய பரிசுத்த ஆவியும், துதியானது அனைத்து காரியங்களை உள்ளடக்கியதாக இருக்க வேண்டும் என்பதை நாம் உணர வேண்டும் என்று கூறுகிறார் . நாசியிலே சுவாசம் உள்ளவரை நம் வாழ்வு கர்த்தருக்கு "பரிசுத்த துதியாக" இருக்க வேண்டும்! உங்கள் துதி எப்படிபட்டது? நீங்கள் அதை சபையில் மட்டும் விட்டுவிட்டீர்களா? உங்கள் முழு இருதயத்தோடும், ஆத்துமாவோடும், மனதோடும், பலத்தோடும் கர்த்தரைத் துதிக்கும்போது, உங்கள் வாழ்நாள் முழுவதும் சில அல்லேலூயாக்களைக் கொண்டாடும் நேரம் வந்திருக்கலாம்!
என்னுடைய ஜெபம்
இஸ்ரவேலின் தேவனும் , உடன்படிக்கையின் தேவனுமானவரே , இயேசு கிறிஸ்துவுக்குள் இஸ்ரவேலின் மூலம் எல்லா தேசத்துக்கும் இரட்சிப்பைக் கொண்டுவரும் உமது வல்லமைக்காக நான் உம்மைத் துதிக்கிறேன் . நீர் கொடுத்த மகிழ்ச்சிக்காகவும் ஆறுதலுக்காகவும் என் இருதயம் உம்மை துதிக்கிறது, உம் அற்புதமான சிருஷ்டிப்புகளுக்காகவும் என் தலைதாழ்த்தி உம்மை துதிக்கிறேன், பரிசுத்த ஆவியின் மூலம் நீர் நிலைத்திருப்பதற்காக என் ஆத்துமா உம்மைப் பாராட்டுகிறது, என் கைகளின் வேலையால் என் பெலத்தினால் உம்மைப் துதிப்பேன் . "அல்லேலூயா!" என்று அவர்கள் அனைவரும் தங்களுடைய சத்தத்தை உயர்த்தும்போது , என் ஜீவன் , இருதயம் மற்றும் சத்தத்தை கேளுங்கள். உமக்கு, தேவன் மட்டுமே! மேசியா இயேசுவின் நாமத்தினாலே , "அல்லேலூயாவும் ஆமென்" என்று கூறுகிறேன்.