இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"ஓ, சின்னஞ் சிறு காதுகளே நீங்கள் கேட்கிறதற்கு கவனமாயிருங்கள் , ... பரலோகத்திலுள்ள நம்முடைய தேவன் அன்போடு நம்மை நோக்கிப் பார்க்கிறார், நீங்கள் கேட்கிறதைக் கவனியுங்கள் , எனவே சின்னஞ் சிறு காதுகளே நீங்கள் கேட்கிறதற்கு கவனமாயிருங்கள். சில சமயங்களில், நம் பிள்ளைகள் பாடும் பாடல்கள் புரிந்துகொள்ள எளிதான வழிகளில் விஷயங்களைக் கூறுகின்றன. தேவன் சத்தமாக கேட்க விரும்பவில்லை; அவருடைய வார்த்தை நம் அவயங்களில் நுழைந்து நம் வாழ்க்கையை மாற்ற வேண்டும் என்று அவர் விரும்புகிறார். தேவனுடைய வார்த்தைகளின் ஆசீர்வாதத்தை நாம் எவ்வளவு அதிகமாகப் பெறுகிறோமோ, அவ்வளவு அதிகமாக அது நம்மை மாற்ற வேண்டும். இல்லை என்றால், பிரச்சனை செய்தியில் இல்லை, கேட்பவர்களிடம் தான் உள்ளது !
என்னுடைய ஜெபம்
அன்பான பிதாவே, தயவு செய்து என் கண்களையும், என் காதுகளையும், என் இருதயத்தையும், என் மனதையும் திறந்தருளும். உமது வார்த்தையில் என் வாழ்வில் நான் பொருத்திக் கொள்ள முடியும். அன்புள்ள தந்தையே, உமது வார்த்தையில் நான் கேட்பது என் வாழ்வில் காணும்படி என்னை ஆசீர்வதியுங்கள். இயேசுவின் அருமையான நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.