இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் இப்பிரபஞ்சத்தையே வார்த்தையினால் உருவாக்கினார் , நம் பெயர்களையும் நம் ஒவ்வொருவரின் தலையிலுள்ள மயிரின் எண்ணிக்கையையும் அறிந்திருப்பதால், நிச்சயமாக நாம் அவரிடம் உதவி கேட்க முடியும் என்பது நமக்குத் தெரியும். எல் ஷடாய் உயர்ந்த பர்வதங்களின் தேவனிடம் நம் கண்களையும் இருதயத்தையும் உயர்த்துவோம். சர்வவல்லவர் நம் தேவைகளைப் பார்க்கிறார், நம் வேண்டுகோள்களைக் கேட்கிறார், நம் இருதயத்தை குறித்து அக்கறை கொள்கிறார், அவருடைய உதவி கிடைக்கவும், அவருடைய நித்திய வீட்டிலே நம்முடன் இருக்கவும் ஏங்குகிறார் என்பதை நினைவில் கொள்வோம்.

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் சர்வ வல்லமையுமுள்ள அப்பா பிதாவே, நான் உம்முடைய உதவிக்காக எதிர்நோக்குகிறேன். என் வாழ்க்கையில் மீட்பு, வல்லமை, ஆறுதல், ஊக்கம், நம்பிக்கை மற்றும் சிறப்பின் ஒரே உண்மையான ஆதாரம் நீர்தான். உமது சித்தத்தை அறிந்து, என் வாழ்க்கைக்கு உமது சித்தத்தைத் தேர்ந்தெடுக்க எனக்கு ஞானத்தைத் தாரும். உமது மக்களுக்கும் எனக்கும் சதாகாலமும் உண்மையுள்ளவராக இருப்பதற்காக நன்றி. இயேசுவின் நாமத்தில், நான் உம்மைத் தேடுகிறேன், உம்மைப் போற்றுகிறேன் , உமக்கு நன்றி செலுத்தி, ஜெபிக்கிறேன் . ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து