இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

இயேசுவானவர் இவ்வுலகத்திற்கு வந்து நமக்காக மரித்து, பின் உயிர்தெழுந்தது நம் பாவங்களற கழுவி ஜீவன் கொடுப்பதற்காக மாத்திரமல்ல. அந்த அளவற்ற ஈவுகளோடு இன்னுமாய் மற்ற ஆசீர்வாதங்களையும் கூட்டி சேர்க்கிறார் : இவைகளை அவர் மறுபடியும் வந்து நம்மை தேவனுடைய நித்திய வீட்டிற்கு அழைத்துச் செல்லும் வரை செய்கிறார் , இயேசு எப்பொழுதும் ஜீவித்து நமக்காக தேவனிடம் கிருபைக்காக வேண்டுதல் செய்து வருகிறார் .இயேசு நம் இரட்சகர் மட்டுமல்ல, அவர் பிதாவின் வலதுபாரிசத்தில் வீற்றிருந்து நமக்காக பரிந்து பேசுகிற நம்முடைய பாதுகாவலரும் சகோதரருமாவார்!

என்னுடைய ஜெபம்

விலையேறப்பெற்ற இரட்சகரே, என் ஆண்டவராகிய இயேசுவே, நான் உம்மை எவ்வளவாய் நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர் . எனக்காக பரலோகத்தை விட்டுவிட்டு . என்னை மீட்பதற்காக உம் மகா மேன்மையை விட்டுக்கொடுத்தீர் . எனக்கு உறுதியளிக்க மரணத்தை அழித்தீர் . ஆனால் இன்று, நான் செய்யும் ஒவ்வொரு விண்ணப்பமும் , நான் எடுத்து வைக்கும் ஒவ்வொரு முயற்சியும் என்னை ஆசீர்வதிப்பதற்காக பிதாவின் முன்னிலையில் நீர் இருக்கிறீர் என்பதை அறிந்து நான் மிகவும் நன்றியுள்ளவனாகவும் இருக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து