இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
"அது ஒன்றும் பெரிய விஷயமில்லை!" இது ஒரு விசுவாசியின் கொச்சையான, பொருத்தமற்ற அல்லது புண்படுத்தும் பேச்சை நியாயப்படுத்தும் அலறலாகும் . இருப்பினும், ஒரு நண்பர் நீண்ட காலத்திற்கு முன்பு என்னிடம் கூறினார் , "அலுவலகத்திலே எங்களுடைய வாயின் வார்த்தைகள் தவறும் பொழுது , எங்களின் நற்பண்புகள் வீழ்ச்சியடைய தொடங்கியது, அது அந்த நேரத்தில் பெரிய விஷயமாகத் தெரியவில்லை, ஆனால் அது பேரழிவுகளுக்கு வழிவகுத்தது!" அன்றாட வார்த்தைகளில் பிரதிபலிக்காத தேவபக்தி வெறுமையும், காலியுமானது . ஆகவே, நம் வார்த்தைகள் மற்றவர்களை ஆசீர்வதிக்கவும் ஊக்குவிக்கவும் பயன்படுத்துவோமாக ,மாறாக சபிக்கவோ, அவதூறாக பேசவோ அல்லது புறம்கூறவோ அல்ல.
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள , ஒப்பற்ற தேவனே , என்னுடைய வார்த்தைகளை மற்றவர்களின் மீட்புக்காக பயன்படுத்தாமல் போனதற்காக அடியேனை மன்னியுங்கள். என் வார்த்தைகளைகொண்டு மற்றவரை புண்படுத்தவும் அல்லது உம்மை கனப்படுத்தாமல் என் வாழ்விலே உம் பரிசுத்தத்தை அவமதிக்கும் வகையில் என்னுடைய வாயின் வார்த்தைகளை பயன்படுத்திய நேரங்களுக்காக என்னை மன்னியுங்கள். இன்றே என் வாயின் வார்த்தைகளை கொண்டு மற்றவர்களை ஆசீர்வதிக்கவும், ஊக்கப்படுத்தவும், ஆறுதல்படுத்தவும் பயன்படுத்தியருளும் , அதனால் மற்றவர்கள் உமது கிருபையை என் மூலம் அறிந்துக்கொள்ளலாம் . இயேசுவின் நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.