இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
தேவனுடைய ஆவியை துக்கப்படுத்தாதிருங்கள் ! ஆனால் தேவனுடைய ஆவியை நாம் எப்படி வருத்தப்படுத்துவது? கசப்புடன், கோபத்தால் தூண்டப்படும் ஆத்திரத்தை கட்டவிழ்த்து விடுவதன் மூலம், மற்றவர்களுடன் சண்டையிட்டு, அவர்களுக்கு தீங்கு விளைவிக்க திட்டமிட்டு அவர்களின் பெயரை அவதூறாகப் பேசும் போது தேவனுடைய ஆவியை துக்கப்படுத்துகிறோம்.இந்த நடத்தைகள் தேவனின் சித்தத்திற்கும் குணத்திற்கும் நேர் எதிரானது மாத்திரமல்ல , ஆவியானவர் நம் வாழ்வில் உருவாக்க விரும்பும் குணங்களான -அன்பு, சந்தோஷம் ,சமாதானம், நீடிய பொறுமை, தயவு , நற்குணம், விசுவாசம், சாந்தம், மற்றும் இச்சையடக்கம் ஆகியவைகளுக்கு நேர் எதிரானது - (கலாத்தியர் 5:22-23). பட்டியலிடப்பட்ட சகலவிதமான கசப்பும், கோபமும், மூர்க்கமும், கூக்குரலும், தூஷணமும், மற்ற எந்தத் துர்க்குணமும் ஆகிய இத்தகைய தீய நடத்தைகள் பரிசுத்த ஆவியை வருத்தப்படுத்துவதில் ஆச்சரியமில்லை; அவை நம் வாழ்விலும் உறவுகளிலும் ஆவியின் செயலுக்கு நேர் எதிரானவை.
என்னுடைய ஜெபம்
சர்வவல்லமையுள்ள பிதாவே, இயேசுவின் குணத்தையும் இரக்கத்தையும் என் வாழ்வில் விளங்கச்செய்ய நான் உறுதியளிக்கும் போது, உமது பரிசுத்த ஆவியின் வல்லமையால் இயேசுவைப் போல இருக்க அடியேனை மாற்றுங்கள் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.