இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மற்றவர்களை நம் வாழ்வில் கொண்டு வந்ததற்காக நாம் தேவனுக்கு நன்றி சொன்னதை அவர்களிடம் பகிர்ந்து கொள்வது ஏன் நமக்கு மிகவும் கடினமாக இருக்கிறது? தேவன் தம்முடைய குமாரனாகிய இயேசுவை, அவருடைய அன்பையும், அங்கீகாரத்தையும், மகிழ்ச்சியையும் அறியும்படி செய்தார். இயேசுவின் ஞானஸ்நானத்தில் அவர் சொன்ன வார்த்தைகள் நினைவிருக்கிறதா? : "நீர் என்னுடைய நேசகுமாரன்,உம்மில் பிரியமாயிருக்கிறேன் " (லூக்கா 3:22) அவர் இந்த வார்த்தைகளில் பெரும்பாலானவற்றை மறுரூபமான மலையில் அநேகமுறை கூறினார், இயேசுவின் அடையாளம், ஊழியம் மற்றும் செய்தியை உறுதிப்படுத்தினார்: இவர் என்னுடைய நேச குமாரன், இவருக்குச் செவிகொடுங்கள் என்று அந்த மேகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாயிற்று. (மாற்கு 9:7). பிதா மகிழ்ச்சியடைந்து குமரானுக்காக நன்றி செலுத்தினார்! அப்போஸ்தலனாகிய பவுல், தான் சுவிசேஷத்தை அறியப் பண்ணின பாடுபடுகிறதான சபைகளுக்காக விண்ணப்பம் பண்ணுகிறார் என்று தெரியப்படுத்தினார் (பிலிப்பியர் 1:3). நம் வாழ்வில் சிறந்த ஒருவருக்காக தேவனுக்கு நன்றி சொல்வது ஒரு மிகப்பெரிய ஆசீர்வாதம். அவர்கள் நம் வாழ்வில் இருப்பதற்காக நாம் தேவனுக்கு நன்றி தெரிவித்துள்ளோம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துவதும், நம் நன்றியுணர்வில் அவர்களைப் பற்றி நாம் என்ன சொன்னோம் என்பதை அவர்களுக்குத் தெரிவிப்பதும் இரட்டிப்பான ஆசீர்வாதம். ஒவ்வொருவரும் இன்று அந்த "இரட்டிப்பான ஆசீர்வாதமான" நபராக இருக்க உறுதி ஏற்போம்!

என்னுடைய ஜெபம்

கிருபையுள்ள பிதாவே , நீர் என்னைப் அநேக வழிகளில் ஆசீர்வதித்துள்ளீர்! இருப்பினும், இன்று, மற்றவர்களின் மூலம் நீர் என்னை ஆசீர்வதித்த பல எண்ணி முடியாத வழிகளைப் பற்றி நான் அறிந்திருக்கிறேன். என் வாழ்வில் நீர் ஏற்படுத்திய அனைத்து அற்புதமான கிறிஸ்தவர்களுக்காக நான் இப்போது உமக்கு நன்றி சொல்ல கடனாளியாயிருக்கிறேன் . தயவு செய்து அவர்களை பாதுகாத்து, பலப்படுத்தி, அவர்கள் என்னை ஆசீர்வதித்தது போல் மற்றவர்களையும் ஆசீர்வதிக்கப் பயன்படுத்துங்கள். இயேசுவின் நாமத்தினாலே , நான் உமக்கு நன்றிகளையும் துதிகளையும் செலுத்துகிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து