இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவனானவர் நம்மை நியாயம் விசாரித்து தண்டிப்பதற்கு பதிலாக, எல்லா இனத்தவரும், எல்லா மொழியினரும் அவரை அறிந்துக் கொள்ளவும், மனந்திரும்பவும், தம்முடைய நேச குமாரனை ஆண்டவராகவும் இரட்சகராகவும் ஏற்றுக்கொண்டு அவரை பின்பற்ற வேண்டும் என்றும் தேவனானவர் விரும்புகிறார். அதனால்தான் இயேசுவானவர் இவ்வுலகத்திற்கு இறங்கி வந்தார் (யோவான் 3:16-27). ஆகையினாலே இயேசுவின் இரண்டாம் வருகை இன்னும் வரவில்லை. ஆகவே, கர்த்தருடைய சித்தத்தைச் செய்து, நாம் கையிட்டுச் செய்யும் எல்லாவற்றிலும் அவரைப் பிரியப்படுத்த வேண்டும் என்பதே நமது விருப்பமாக இருந்தால், இவ்வுலகிலே வாழும் மக்கள் யாவருக்கும் இயேசுவை குறித்ததான எளிய சத்தியத்தை அறிந்துக்கொள்ளும்படி அழைத்து வர நாம் ஏதாவது செய்ய வேண்டாமா? இதுவே இயேசு நமக்குக் கொடுத்த ஊழியமாகும் (மத்தேயு 28:18-20; அப்போஸ்தலர் 1:8). அவருடைய கிருபையை அறிந்து, மனந்திரும்பி இயேசுவை ஆண்டவராகப் பின்பற்ற அவர்களை அழைக்க நம்மால் முடிந்த அனைத்தையும் செய்ய வேண்டாமா?

என்னுடைய ஜெபம்

நீதியும் அன்பும் நிறைந்த பிதாவே , நான் எனது நம்பிக்கையை எனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள முயற்சிக்கையில் தயவுக்கூர்ந்து எனக்கு உதவி செய்யும் . சுவிசேஷத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்வதற்கு எனது இன்பமான சூழ்நிலையிலிருந்து வெளியே எப்போது, ​​எப்படி செல்வது என்பதை அறிய எனக்கு தைரியத்தையும், ஞானத்தையும் மற்றும் நேரத்தையும் எனக்குத் தாரும். இழந்து போனவர்களை மனந்திரும்பச் செய்வதற்கும், இயேசுவை ஆண்டவராகப் பின்பற்ற அவர்களுக்கு உதவுவதற்கும் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நீர் ஆசீர்வதியும் . இயேசுவின் நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து