இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

மனந்திரும்புதலில் நாம் சுயமாக தேடும் வழிகளை விட்டு விலகும்படி தேவன் கட்டளையிடுகிறார். அவருடைய சித்தத்திற்குக் கீழ்ப்படிவதற்கான விருப்பத்துடன் அவரிடம் திரும்பும்படி அவர் நம்மிடம் மன்றாடுகிறார். நாம் மறுதலித்தால், நாம் மரணத்தை நோக்கி செல்லும் பாதையில் நடக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள வேண்டும். தேவன் நம்மில் மறுபடியும் பிறத்தல் மற்றும் புதுப்பித்தல் வேலையைச் செய்ய விரும்புகிறார், ஆனால் நாம் நமது அழிவுகரமான வழிகளிலிருந்து திரும்பவும், அவருடைய பரிசுத்த ஆவியால் நாம் புதியவர்களாக இருக்கவும் நம் இருதயங்களை அவருக்கு அர்ப்பணிக்கவும் வேண்டும் என்று அவர் ஏங்குகிறார். மனந்திரும்புதல் என்பது அழிவுக்கு அழைத்துச் செல்லும் பாதையை விட்டுவிட்டு, ஜீவன் , சந்தோஷம் மற்றும் இரட்சிப்பின் இடமான பிதாவின் நித்திய வீட்டிற்குச் செல்லும் பாதையில் திரும்புவதேயாகும் !

என்னுடைய ஜெபம்

மகத்துவமுள்ள தேவனே , என் வாழ்க்கையை நானே மேற்கொள்ள முயற்சித்ததற்காக என்னை மன்னியுங்கள். நான் உமது வார்த்தைக்குக் கீழ்ப்படியாதபோதும், உமது சித்தத்திற்கு எதிராக துரோகம் செய்தபோதும் நான் காரியங்களை சரிவர செய்யவில்லை என்று ஒப்புக்கொள்கிறேன். என் இருதயத்தையும் வாழ்க்கையையும் முழுவதுமாக உம்மிடம் ஒப்புவிக்க விரும்புகிறேன். நான் உமது விருப்பத்தைப் பின்பற்றி உமது மகிமைக்காக வாழ விரும்புகிறேன். நான் உம்மில் ஜீவனைக் காண முற்படும் போது உமது மன்னிப்புக்கும், பெலனுக்கும் நன்றி. இரட்சகராகிய இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து