இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
நம்முடைய பாவங்களை அறிக்கையிடுவது என்பது நம்முடைய பாவத்திற்காக இரண்டு காரியங்களைச் செய்வதாகும். ஒன்று, தேவனுடைய பார்வையில் பாவம் என்னவாக இருக்கிறது என்று நாம் உணர்கிறோம். மற்றொன்று, நாம் நம்முடைய இரகசியங்களிலிருந்து விடுபட்டு, நமது பலவீனம், தவறுகள் , தோல்விகள் மற்றும் பாவங்களைப் குறித்து மற்றொரு கிறிஸ்தவரிடம் உண்மையாக அறிக்கையிட வேண்டும் . யாக்கோபின், வார்த்தைகள் வல்லமை வாய்ந்தது. இந்த அறிக்கையிடுதல் மன்னிப்பை மாத்திரம் கொடுப்பதில்லை, இன்னுமாய் சொஸ்தமடையவும் செய்கிறது என்று அவர் குறிப்பிடுகிறார்.
என்னுடைய ஜெபம்
பரிசுத்த பிதாவே , நான் பாவம் செய்தேன். நான் இப்போது எனது இரகசியமான எல்லா பாவங்ளையும் அறிக்கையிடுகிறேன் . உம்முடைய மன்னிப்பையும், சோதனையையும் மேற்கொள்ளவதில் என்னைப் பலப்படுத்த உமது பரிசுத்த ஆவியை தந்தருளும் . நான் உமக்காக வாழ விரும்புகிறேன், என்னுடைய சொந்த பாவமமோ, அல்லது மற்ற எந்தப் பாவமோ என்னைச் சிறைபிடித்து , உம்மிடமிருந்து என்னை பிரித்து, தூரமாய் கொண்டு செல்லாதபடி விரும்புகிறேன். இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தின் மூலமாய் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.