இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

தேவன் தம் மக்களை எகிப்திலிருந்து செங்கடல் வழியாக விடுவித்து, பத்து வாதைகள் நடப்பித்ததன் மூலம் அவர்களை விடுவித்து, ஒரேப் மலைக்கு அழைத்துச் சென்றார், அங்கு மோசேக்கும் அவருடைய ஜனங்களுக்கும் பத்துக் கட்டளைகளை வழங்குவதற்காக அவர் இறங்கி வந்தார். அவர்கள் தேவனின் பிரசன்னத்தைப் பெறவில்லை , அவருடைய விடுதலைக்குத் தகுதியானவர்கள் இல்லை , நிச்சயமாக அவருடைய அன்பைப் பெறவில்லை. இருப்பினும், தேவனின் தம்முடைய கிருபையின் காரணமாக அவர்களுக்கு விடுதலையினால் ஆசீர்வதித்தார் மற்றும் ஆபிரகாமுக்கு அவர் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றினார். தேவன் கர்த்தாதி கர்த்தர் , சர்வ வல்லமையுள்ளவர், நிகரற்றவர் . ஆச்சரியப்படும் விதமாக, வேதம் முழுவதும், தேவன் இதே முறையைப் பின்பற்றுகிறார். அவர் தம் மக்களை மீண்டும் மீண்டும் கிருபையுடன் ஆசீர்வதிக்கிறார்; பிற்பாடு அவர் தமது மக்கள் அவரை தொழுதுக்கொள்ளுவதற்கும்,கீழ்ப்படிவதற்கும் அழைக்கிறார். மற்ற மதங்களின் தேவன் தங்கள் தயவுடன் மக்களை ஆசீர்வதிக்கும் முன் பின்பற்றுதல், தியாகம் மற்றும் கீழ்ப்படிதல் ஆகியவற்றைக் கோரினர். கர்த்தர், மாபெரிதானவர் "நானே ", என்று மோசேக்கு தன்னை வெளிப்படுத்தினார் (யாத்திராகமம் 3:4-13), அவர் மாத்திரமே தேவன் என்று அங்கீகரிக்கப்படுவதற்கு தகுதியானவர். இஸ்ரவேலருக்கு அவருடைய கிருபை அன்பு, இரக்கம் மற்றும் ஒப்பற்ற மகிமையை வெளிப்படுத்திய அவர், என்னையன்றி உனக்கு வேறே தேவர்கள் உண்டாயிருக்கவேண்டாம் என்றார் ; அவர் மாத்திரமே துதிக்கு பாத்திரர் !

என்னுடைய ஜெபம்

சர்வவல்லமையுள்ள தேவனே , நீர் ஒருவரே எல்லா கனத்துக்கும், துதிக்கும், போற்றுதலுக்கும் தகுதியானவர். என் இருதயம் எப்பொழுதும் உம்மை துதிக்கும், உமது மகிமையை கனப்படுத்தவும் , உம் கிருபையைப் போற்றவும் விரும்புகிறேன். தயவு செய்து உம்மிடம் என் அன்பையும் விசுவாசத்தையும் காண்பிக்க விரும்புகிறேன் . இதை இயேசுவின் நாமத்தினாலே என் முழு மனதுடனே அன்போடும் கானத்துடனும் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து