இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அவருடைய இரட்சிப்பை நமக்கு அளிப்பதற்கு நாம் "நல்லவர்களாகும்" வரை தேவன் காத்திருக்கவில்லை. இந்தச் சூழலில் (ரோமர் 5:6-10) கிருபையின்றி நம்மை விவரிக்கும் வார்த்தைகளை கவனியுங்கள்: பெலனற்றவர்கள், தேவபக்தியற்றவர்கள், பாவிகள் மற்றும் அக்கிரமகாரர்கள். நாம் காணாமற்போனவர்களும், ​​அவருடைய கிருபை மிகவும் இன்றியமையாதபோது தேவன் இயேசுவானவரை அனுப்பினார். அவர் தம்முடைய ஜீவனை நமக்காகக் கொடுத்ததினாலே அன்பு இன்னதென்று அறிந்திருக்கிறோம்; நாமும் சகோதரருக்காக ஜீவனைக்கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம். (1 யோவான் 3:16). இது அறிவிக்கப்பட்ட அல்லது உணர்ந்ததை விட அதிகம்; இது மிகவும் பிரகாசமாக நிரூபிக்கப்பட்ட ஒன்று!

என்னுடைய ஜெபம்

பரிசுத்தமும் அன்புமுள்ள பிதாவே, இயேசுவின் மூலமாக உமது அன்பை இவ்வளவு வல்லமை வாய்ந்த மற்றும் தியாக வழிகளில் வெளிப்படுத்தியதற்கு நன்றி. அவருடைய நாமத்தினாலே ஜெபிக்கிறேன்,ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து