இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
கனத்தை செலுத்த வேண்டியவருக்கு உரிய கனத்தை கொடுங்கள்! பரிசுத்த வேதாகமத்தின் கொள்கை ஸ்திரீகளுக்கு , குறிப்பாக தேவனுக்கு பயந்து வாழ்கிற தாய்மார்களுக்கு மிகவும் மெய்யாக இருக்கிறது. இன்று நம் வாழ்வில் உள்ள குணசாலியான ஸ்திரீகளை பார்த்து பாக்கியவதி என்று சொல்வோமாக !
என்னுடைய ஜெபம்
பிதாவே , இன்று நான் உம்மை கண்டுபிடித்து, பின்பற்றி, மெய்யாய் ஊழியஞ் செய்து என் வாழ்க்கையை வடிவமைக்க உதவிய, நற்குணங்களான இரக்கம் , சாந்தம், வைராக்கியம், அன்பு, உறுதி ஆகியவற்றை கொண்ட ஸ்திரீகளுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். இந்த நாளில் அவர்களை ஆசீர்வதிக்கும்படியாய் இயேசுவின் நாமத்தில் அடியேன் விண்ணப்பக்கிறேன் . ஆமென்.