இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
விசுவாசத்தின் சுழற்சி இந்த வசனப் பகுதியில் விளக்கப்பட்டுள்ளது. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து நமக்கு சிறந்த மாதிரி . விசுவாசமுள்ள மக்கள் நமக்கு தேவனுடைய தன்மையையும் அவர் மீது உள்ள ஆர்வத்தையும் மாதிரியாகக் காண்பிக்கிறார்கள் . நாம் அந்த விசுவாச வாழ்க்கையை மற்றவர்களுக்கு முன்மாதிரியாகக் கொண்டு வாழ்கிறோம். வேறு வார்த்தைகளில் கூறுவதானால், நற்செய்தி நாம் கூறும் வார்த்தைகளை விட அதிகம்! நற்செய்தி என்பது ஒரு மனிதனின் வாழ்வில் வேரூன்றிய இயேசுவின் நற்செய்தி, அது தரும் கனியை மற்றொருவர் பார்த்து அதை வாழத் தொடங்குகிறார் என்பதற்கு ஆண்டவராகிய இயேசுவின் மாதிரியே நமக்கு போதுமானதாகும் ! சுவிசேஷத்தை மாதிரியாயும் காண்பிக்கிறோம் இன்னுமாய் அவைகளை போதிக்கிறோம் !
என்னுடைய ஜெபம்
பரிசுத்தமுள்ள தேவனே, இயேசுவின் மூலமாக வேதத்திலும் மனித மாம்சத்திலும் உமது குணத்தை வெளிப்படுத்தியதற்காக உமக்கு நன்றி. உமது பரிசுத்த ஆவியின் மூலமாய் , கிறிஸ்துவின் குணாதிசயத்தை என்னில் உருவாக்கித் தரும்படி கேட்டுக்கொள்கிறேன், அதனால் மற்றவர்கள் இயேசுவை என் முன்மாதிரியாகக் கண்டு அவருக்காக வாழ வேண்டும். இரட்சகராகிய இயேசுவின் அருமையான நாமத்தினாலே நான் ஜெபிக்கிறேன். ஆமென்.