இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்
பிந்தினோர் முந்தினோராகவும் , பிணியாளிகள் குணமடையவும், பாவிகள் இரட்சிக்கப்படவும், காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்கவும் இயேசுவானவர் இவ்வுலகத்துக்கு வந்தார். அதுவே அவரது நோக்கமாக இருந்தது: நொறுங்குண்டதை குணமாக்கவும் - நமக்குள் நொறுங்கியது காரியங்கள் மாத்திரமல்ல , நாம் ஜீவிக்கிற இவ்வுலகில் உடைந்துபோன யாவற்றையும் , அழிந்துப்போன மனுஷகுலத்தையும் மற்றும் இந்த நொறுங்கின நிலையில் இழந்துபோன யாவற்றையும் மீட்கும்படி வந்தார் . அப்படியானால், நம்முடைய இரட்சகரும், மனுஷகுமாரனுமாகிய இயேசுவின் நாமத்தை நாம் எப்படி தரித்துக் கொள்வது, நம் உலகில் நாம் இழந்துவிட்டதைக் காணும் நோக்கில் அவருக்கென்றும், ஆர்வத்துடனும் நோக்கத்துடனும் வாழாமல் இருப்பது எப்படி?
என்னுடைய ஜெபம்
அன்புள்ள பிதாவே,சர்வவல்லமையுள்ள தேவனே , உமது மக்களில், குறிப்பாக என்னிடத்தில், உமது ஆவியானவர் பரிசுத்த உணர்வைத் தூண்டிவிட வேண்டும் என்று நான் ஏங்குகிறேன், இதனால் இயேசுவின் நோக்கத்தை என் வாழ்விலும், குடும்பங்களிலும், சபைகளிலும் நாம் அதிகமாகப் பிரதிபலிக்க முடியும். என்னை இரட்சிக்க வந்த மனுஷகுமாரனாகிய இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.