இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

அதனால் தேவன் மகிழ்ந்து களிக்கூர விரும்புகிறார்! அவர் தனது மகிழ்ச்சியூட்டும் பாடல்களை அவர் நேசிப்பவர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறார். நம்முடைய தேவன் அப்பா பிதா மாத்திரமல்ல , அவர் தாயைப் போல தேற்றுபவர் . அவர் பாசத்துடன் அவருடைய பிள்ளைகளை சந்தோஷமாய் தேற்றி அமந்திருப்பார் .

என்னுடைய ஜெபம்

தேவனே , வாழ்க்கையின் புயல்கள் எனக்கு எதிராக வீசும்போது, ​​​​இந்த வார்த்தைகளை நினைவில் வைத்துக் கொண்டு, உம்முடைய நிழலின் பாதுகாப்பில் நான் அடைக்கலமும் , ஆறுதலும், அமைதியும் காண வேண்டும் என்று நான் ஜெபம் செய்கிறேன். தேவனே, ஒவ்வொரு நாளும் உமது இரட்சிப்பை எனக்கு மேலும் தெளிவுபடுத்தும் போது, ​​என் வாழ்க்கையில் நீர் களிகூருவதைப் பற்றி எனக்கு உணர்த்துங்கள். என் இரட்சகராகிய இயேசுவின் மூலம் நான் ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள phil@verseoftheday.com என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து