இந்தநாளுக்குரிய வேதவார்த்தையின் கருப்பொருள்

கிறிஸ்தவர்களாகிய நாம் கலாச்சாரத்திலிருந்து நம்மைத் தனிமைப்படுத்திக் கொள்ள அழைக்கப்படவில்லை. நம்மைச் சுற்றியுள்ள காணாமற் போன உலகத்திலிருந்து பிரிந்து தனிமைவாதிகளாக இருக்க நாம் அழைக்கப்படவில்லை. மாறாக, இருள் சூழ்ந்த இவ்வுலகில் நாம் ஒளியாக வாழ வேண்டும் - ஒரு சிறிய படுக்கையறையில் மங்கலான வெளிச்சத்தை தரும் மெழுகுவர்த்திகள் வைத்திருப்பது போல அல்ல, மாறாக உயரமான இடத்தில் ஒளிரும் விளக்குகள் அமைக்கப்பட்டால் அனைவராலும் தங்கள் ஒளியைக் காண முடியும். இயேசுவின் சீஷர்களாகிய நாம் வெளிச்சம் மறைக்கப்படமுடியாத மலையின் மீதுள்ள நகரமாக அழைக்கப்பட்டுள்ளோம். நிச்சயமாக, நம்முடைய குறிக்கோள், நம்மை நாமே கவனித்து கொள்ளவது அல்ல, ஆனால் நம்முடைய பிதாவின் மகிமையான கிருபையைப் பார்க்க மற்றவர்களுக்கு உதவுவதுதான், அதனால் அவர்கள் இயேசுவிடம் வருவார்கள், அவரே உலகின் மெய்யான ஒளி!

என்னுடைய ஜெபம்

அன்புள்ள பரலோத்தின் பிதாவே , மற்றவர்கள் உம்மையும் உம் அன்பையும் இன்னும் தெளிவாகக் காண என் வாழ்க்கை அவர்களுக்கு ஆசீர்வாதமாக அமையட்டும் . இயேசுவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்.

இன்றைக்கான வார்த்தை அதின் கருப்பொருள் மற்றும் ஜெபம் ஆகியவை சகோதரர் பில்வேர் அவர்களால் எழுதப்படுகிறது. நீங்கள் உங்களுடைய கேள்விகள் அல்லது கருத்துக்களை பகிர்ந்துகொள்ள [email protected] என்ற மின்னஞ்சல் மூலமாக தெரிவிக்கலாம்.

கருத்து